புதன், 8 நவம்பர், 2017
EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்
EMIS தகவல்
👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்
👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்
👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன
👉இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்
NMMS தேர்வு - online பதிவு - வழிமுறைகள...
Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் "Click to access online portal" பகுதியை Click செய்யவும்
Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.
Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும்.
Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.
Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )
Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.
Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...
SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
👉download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.
👉தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.
அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇
1.மாணவனின் online registration application - 2 நகல்கள்
2.SCHOOL WISE REPORT - 2 நகல்கள்
3.தேர்வு கட்டணம் .
நவம்பர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை
👉 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு
👉CRC level science exbition (9-11-17)
👉கலைத்திருவிழா
👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்
👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்
👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.
👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)
👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3 spell)
👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு ஈடு செய்வேலைநாள்
👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்
👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார்த்தல்,
👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,
தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்
👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன்படுத்துதல்
👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துத்துதல்
செவ்வாய், 7 நவம்பர், 2017
வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.
'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
விண்வெளிக்குச் சென்ற சிறுவனின் செயற்கைக்கோள்!
டென்னிஸ் பந்தை விட எடை குறைவான செயற்கைக்கோள்
ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி, இந்தியாவைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான். இது 3D பிரிண்டரில் மூலம் வடிவமைக்கப்பட்ட முதல் சாட்டிலைட் ஆகும்.
உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, `கியூப் இன் ஸ்பேஸ்' என்ற தலைப்பில் உலகம் முழுதும் உள்ள 11 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்கும் போட்டி ஒன்றை நடத்தியது. `க்யூப் சேட்' என்ற 10 சதுர செ.மீ அளவு உள்ள பெட்டிக்குள் பொருந்தும் அளவிலான செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைப்பதே அந்தப் போட்டியின் நோக்கமாகும். ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், 80 சிறந்த செயற்கைக்கோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.