சனி, 25 நவம்பர், 2017

ஜாக்டோ-ஜியோ கொல்லிமலை வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் மாவட்டத்துணைத்தலைவர் க.பழனிசாமி தலைமைதாங்கினார்....


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ
கொல்லிமலை வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு  மன்றத்தின் மாவட்டத்துணைத்தலைவர் க.பழனிசாமி தலைமைதாங்கினார்.மன்றத்தின் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் மணிகண்டன்,
வட்டாரச்செயலாளர் பி.சுதாகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்று கோரிக்கை விளக்க உரைஆற்றினார்.

அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்

அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு:
 மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!

கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.

கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும்.

மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், "இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

SSA -SPD PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category of School -Reg...

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு....

TNPSC Exam 2018 - Tips & Study Materials...

 ⭐TNPSC Exam - How to Apply Online?👇
https://goo.gl/7SiBVb

⭐TNPSE Exam-Study Materials...👇
https://goo.gl/7zhVPA

⭐TNPSC Exam - Previous Year Question Papers - Free Online Test...👇
https://goo.gl/gM1Wy6

வெள்ளி, 24 நவம்பர், 2017

ஜேக்டோ-ஜியோ போராட்டம் பாவலர் அவர்களின் அறிக்கை


பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த சேலத்தில் இணையவழி பண்பலை தொடக்கம்...


தமிழகத்தில் முதல்முறையாக, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர், மாணவர்களின் திறனை ஊக்குவிக்க சேலத்தில் இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், இணையவழி பண்பலை கல்வி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பண்பலை சேவையை, மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். தொழில்நுட்ப பிரிவு துறைத்தலைவர் விஜயலட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார். இணையதளத்தில் மாங்கனி பண்பலை அல்லது டயட்(DIET) சேலம் என்ற தளத்தில் மூலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பண்பலை சேவையை தொடங்கி வைத்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறியது:தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி செய்திகள், கற்றல் கற்பித்தலின் தற்போதய முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திற்கு இணையான செய்திகள், பாடல்கள், கதைகள் மற்றும் சொற்பொழிவுகளை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பாடும் திறன், கதை கூறும் திறன், புதிர்கள், நாடகங்கள், பாடக்கருத்துகளை வழங்கும் விதம் ஆகியவை மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைவளர்த்துக்கொள்ள முடியும். மேலும், கற்றலில் ஏற்படும் சந்தேகங்கள், தெளிவுரைகளையும் போக்கும் வகைகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்.

முதற்கட்டமாக, இந்த ஒலிபரப்பு சேவையை தினமும் அரை மணி நேரம் பள்ளி இடை வேளை நேரத்தில் கல்வி தொடர்பான தகவல்கள் இந்த பண்பலை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேம்படுத்தி முழுநேரமாகவும், உடனுக்குடன் தகவல்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.  

Income Tax Slab in 2017-18 For Individual Tax Payers