கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.
கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும்.
மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், "இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக