1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும்
திருமணமாகி
இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும்
விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.
2. பிறந்த தேதி, ஜாதி பிரிவு, ஜாதி உள் பிரிவு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் போன்றவை கவனமாக பதிவிட வேண்டியது மிகவும் முக்கியம்.
தவறாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் இவற்றால்
திருத்தங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது.
3. எப்போதும் அறிவிப்பு வந்த உடன் விண்ணப்பம் செய்ய வேண்டாம். இரு நாட்கள் கழித்து விண்ணப்பம் செய்வது நலம். ஏனெனில், கணினி சர்வர் பிரச்சினை, ஆன் லைன் பணப்பரிவர்த்தனை சம்பந்தமாக சில
பிரச்சினைகள் வரலாம்.
4. அதே சமயம்,மாதம் முழுவதும் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் கடைசி இரு நாட்களில் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். ஒட்டு மொத்தமாக அனைவரும் இறுதி கட்டத்தில் விண்ணப்பிப்பதனால் கணினி சர்வரின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உங்களால் விண்ணப்பிக்க இயலாமல் போகலாம்.
5. கூடுமானவரை மொபைலில் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். வீட்டில் கணினி இருந்தால் பயன்படுத்தவும், அல்லது ஏதுனும் கணினி மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். மொபைலில் விண்ணப்பிக்கும் பொழுது, உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் எண்கள் அல்லது எழுத்துக்கள் கூடுதலாக அச்சாகி விடலாம்அல்லது தவறுகளை கண்டுபிடிப்பது கடினம்.
6. விண்ணப்பத்தில் மின்-அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்யும் பொழுது உங்களுக்கு சொந்தமான மின் அஞ்சல் மற்றும், நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் அலைபேசி எண்களைக் கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் எண்களை, மின் அஞ்சலைக் கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில், நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வேளையில் உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற தகவல்களை - அழைப்புகளை உங்களால் பெற முடியாமல் போகலாம்.
7. தேர்விற்கு தேர்வு கட்டணம் கட்டுவது என்பது மிகவும் முக்கியம். SC, ST பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், மற்றும் மாற்று திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்க்கு திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்க்கு அதிகமான குறைபாடு உடையார்க்கு மட்டும் நிரந்தர கட்டண விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே உங்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த சந்தேகம் இருப்பின் கட்டணத்தை கட்டிவிடுவது மிகவும் நன்று.
8. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையை பயன்படுத்தி இருந்தால் சான்றிதழ் சரிபார்ப்பில் பொது போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.
9. சான்றிதழ் எண்கள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிகளை நன்கு கவனித்து பதிவு செய்ய வேண்டும்.
10. உங்களது விண்ணப்பித்தினை நீங்கள் பூர்த்தி செய்வது நன்று. கணினி மையங்கள் மற்றும் உங்களது நண்பர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின் நீங்கள் அருகில் இருக்க வேண்டும்.
உங்களது சான்றிதழ் எண், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி போன்றவற்றை பதிவு செய்யும் பொழுது சிறிது தவறு நேரிட்டாலும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது நீங்கள்தானே தவிர விண்ணப்பிக்க உதவியர்கள் அல்ல.
11.தற்போது TNPSC -விண்ணப்பத்தில் எடிட்டிங் வாய்ப்பையும் கொடுப்பது அரிதாகி வருகிறது. சில தகவல்களை மாற்ற முடியாமல் செய்து விடுகிறார்கள்.
12. நீங்கள் நிரந்தர பதிவில் சில தவறுகள் ஏற்கனவே செய்து இருந்தாலும், விண்ணப்பத்தில் சரியாகக் கொடுக்க முயற்சியுங்கள்.
TNPSC-ல் எந்த ஒரு தேர்விற்கும், அதற்க்காக விண்ணப்பிக்க பட்ட விண்ணப்பத்தின் தகவல்களிலே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதனை நினைவில் கொள்க.
13. எந்த தேர்விற்கு விண்ணப்பித்தாலும், அந்த தேர்விற்க்கென்று கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளை நன்கு படித்துப் பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும். படிக்காமல் விண்ணப்பிப்பது தவறு.
14. தமிழ் வழியில் படித்து இருப்பின் அதனை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்தால் நீங்கள் குரூப் -4 மற்றும் VAO தேர்வுகளுக்கு மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்.
இளநிலை தமிழ் வழியில் படித்து இருந்தால் குரூப் -1, குரூப் -2 மற்றும் குரூப் -2A போன்ற தேர்வுகளுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற தகுதியானவர். இந்த தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழி சான்றிதழை பயன்படுத்த கூடாது.
15. புகைப்படம் அண்மையில் எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்துதல் நலம்.
16. கட்டண தேர்வினை Credit Card/ Debit Card போன்றவற்றின் மூலம் செலுத்துதல் நலம். உங்களுக்கு விரைவாக கட்டணம் அவர்களிடம்
(TNPSC) சென்று விட்டதற்கான ஒப்புதல் கிடைக்கும்.
17. தபால் அலுவலகம் மூலம் கட்டண சலுகை செலுத்துபவர்கள் இறுதி நாட்களில் விண்ணப்பம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தபால் மூலம் கட்டணம் செலுத்தும் பொழுது உங்களது பணம் அவர்களிடம் சென்றடைய மூன்று வேலை நாட்கள் ஆகும்.
18. விண்ணப்பித்து முடிந்த உடன் வரும் உங்கள் விண்ணப்பத்தின் கோப்பினை, உங்கள் மின் அஞ்சலில் சேமித்து வைத்துக் கொள்வது நலம். பின்னாளைய தேடுதல்களுக்கு உதவும்.
19. தமிழ் வழி, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவ வீரர், ஆதரவற்ற விதவை, ஏற்கனவே அரசு ஊழியர் போன்ற தகவல்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.
இவற்றை குறிப்பிட தவறி விட்டு, பின்னாளில் அதற்கான அத்தாட்சியைக் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் அதற்கு உண்டான சலுகையை இழக்க நேரிடும்.
20. ஒவ்வொரு தேர்விற்கும் உரிய கல்வி தகுதி மற்றும் தொழில் நுட்பத் தகுதியினை அறிவிப்பு வந்த தேதிக்கு முன்னாள் முடித்து இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் சான்றிதழ் சரி பார்ப்பில் நீக்கப் படுவீர்கள்.