திங்கள், 27 நவம்பர், 2017

Snapchat - ன் வசதி Facebook-ல்!

ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்டீர்க்ஸ் என்ற  புதிய வசதியை சோதனை செய்ய உள்ளது.

முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் தொடர்ச்சியாக பலவேறு புதிய வசதிகளை சோதனை செய்து வருகிறது. அதன்படி தற்போது ஸ்டீர்க்ஸ் என்ற புதிய வசதியைச் சோதனை செய்ய உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. ஸ்னேப்சாட்டில் இதற்கு முன்னரே ஸ்னேப்ஸ்டீர்க்ஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

அதிலுள்ள வசதிகளை தான் சோதனை செய்ய உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ஆனால் அதில் உள்ளது போன்றே இல்லாமல் இதில் எமோஜிகளை பயன்படுத்த உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டீர்க்ஸ் என்ற வசதியானது தொடர்ச்சியாக ஒரு பயனர் அவரின் நண்பர்களுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பொழுது எத்தனை நாட்கள் அந்த நபருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றம் செய்து வருகிறார் என்று பாப்அப் நோட்டிஃபிகேஷன் முறையில் அந்த பயனர்களுக்கு காண்பிக்க உதவும். அதுமட்டுமின்றி அந்த நபருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்யுமாறும் நோட்டிஃபிகேஷன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த வசதியை ஸ்னேப்சேட் நிறுவனம் நீண்ட நாட்களாக இந்த வசதியைப் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அதனை சோதனை செய்ய உள்ளது. இந்த தகவல் வெளியான பிறகு பல்வேறு கருத்துக்களை பயனர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்பட்ட ஸ்டோரி என்ற வசதியை பயன்படுத்தி வருவது போல் தற்போது இந்த வசதியை பயன்படுத்த உள்ளது.

மழை நீடிக்கும்... வானிலை மையம்!


அடுத்த 38 மணி நேரத்துக்குத் தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம்
கூறியதாவது...

தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்திய பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி பரவியுள்ளது. இதனால் அடுத்த 38 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது "என்று தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் தமிழகம், இலங்கையையொட்டியுள்ள பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 26 நவம்பர், 2017

சூரியனில் பெரிய ஓட்டை~நாசா கண்டுபிடிப்பு...

NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது...


மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது. 

நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு முழுமை பெறாது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், வட மாநிலம் தொடர்பான வரலாறு அதிகம் இடம் பெற்றுள்ளது.குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி, கம்போடியா, வியட்நாம் வரை விரிந்து கிடந்தது என்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும்.ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை நாம் இங்கு விருப்ப மொழியாக படிக்கும்போது, வட மாநிலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விருப்ப பாடமாக இடம் பெறச்செய்ய வேண்டும்.

வள்ளுவரின் திருக்குறள் உலகத்திற்கே பொதுவானது. அதில் எந்த சூழலுக்கும் ஏற்ற கருத்துக்கள் உள்ளன. திருக்குறள் மற்றும் வள்ளு வரின் வரலாறு குறித்த, என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினேன். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் சேர்க்கப்படவுள்ளது.

தமிழ் உச்சரிப்புக்காக தயாராகும் " உலகெலாம் தமிழ்" குறும்படம்...

மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.

தமிழை சரியாக உச்சரிக்க, ஒலிக்க, எழுத அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப, இயற்கை, பண்பாடு, மதிப்பீடுகள் சார்ந்து, பல்வேறு தலைப்புகளில், குறும்படங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, எளிய முறையில் பாடல்களாக, நாடகங்களாக தயாரிக்கின்றனர்.

இதன் மூலம், தமிழை, 30 நாட்களில் எளிதாக புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். இவை அனைத்தும், 'உலகெலாம் தமிழ்' எனும் தலைப்பில், 10 - 12 நிமிடங்களுக்கு உட்பட்ட குறும்படங்களாக வெளிவர உள்ளன.

மதுரை திருமலை நாயக்கர் மகாலில், 'ர், ற்' என்ற இரு வார்த்தைகளின் உச்சரிப்பு குறித்து, ஒரு அரசவை காட்சியும், நடனமும் படம் பிடிக்கப்பட்டது.

இந்த குறும்படங்களை, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, தமிழை கற்க விரும்பும், மொழியின் அழகியலை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்க உள்ளது.

சனி, 25 நவம்பர், 2017

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு தேர்வுத் தாள் 2017

English for slow learners.pdf

https://drive.google.com/file/d/12thN3jC_LrapZq2FemxJ5N5E8KfsJS2q/view?usp=drivesdk

G.O Ms : 335 - New Prayer Timings For Tamil Nadu govt Schools

ஜாக்டோ-ஜியோ இராசிபுரம் வட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெ.பாலமுரளி தலைமைதாங்கினார்...

24.11.17ஆம்தேதிய
இராசிபுரம் வட்ட ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு  மன்றத்தின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெ.பாலமுரளி தலைமைதாங்கினார்.மன்றத்தின் தலைமைநிலையச்செயலாளர் பெ.பழனிசாமி,மாவட்டத்துணைச்செயலாளர் கு.பாரதி ,வட்டாரச்செயலாளர்கள்இர.ஜெகநாதன்(வெண்ணந்தூர்),எஸ்.அமல்ராஜ்(இராசிபுரம்),சி.மோகன்குமார்(நாமகிரிப்பேட்டை),மன்றத்தின் மாவட்டநிர்வாகிகள்த.அருள்குமார்,சு.சிதம்பம்,வெ.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் பெருந்திரளாய் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கினர்.

ஜாக்டோ-ஜியோ பரமத்தி-வேலூர் வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில ப்பொதுக்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்...

24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ 
பரமத்தி-வேலூர்
வட்ட 
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில ப்பொதுக்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார்,
கபிலர்மலை ஒன்றியத்தலைவர் மணிவண்ணன்,ஒன்றியச்செயலாளர் மெ.சங்கர் ஆகியோர் கோரிக்கை  விளக்க உரை ஆற்றினர்.
மன்ற ஆசிரியப் பெருமக்கள் கலந்துகொண்டனர்...