வெள்ளி, 1 டிசம்பர், 2017

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்?



வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள புயலுக்கு 'ஒகி' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப் புயலுக்கு வங்கதேசம் பெயர் வழங்கியுள்ளது. 

இப்படி, ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன?

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும்ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.

புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-ல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பெருங்கடலில்...

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. 

புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.

Tamilnadu Open University-B.Ed & B.Ed (SE) Examination December 2017 Hall Tickets Published...

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்...

DIARY~ DECEMBER 2017…


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது...

📗3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,

📗5.12.17- உலக மண் தினம்,

📗9.12.17- குறை தீர்க்கும் நாள்,

📗11.12.17- உலக மலைகள் தினம்,

📗18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு ...

📗24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை...

📗2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.

வியாழன், 30 நவம்பர், 2017

DSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்~ செயற்குழு கூட்டம்…

DSE - TOILET CLEANING REG~ DIRECTOR PROCEEDINGS ..

நாளிதழ்~செய்திகள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ கபிலர்மலை ஒன்றிய செயற்குழுக் கூட்டம் _ 28/11/17_ வெங்கமேடு (வேலூர்)

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 - அரசாணை

தொடக்கக்கல்வி:1987க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு என திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை...

தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை...


அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும்.  இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.