செவ்வாய், 12 டிசம்பர், 2017

சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET கட்டாயம் ..இயக்குனர் ஆணை ..

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ? A few basic info on real estate...


 
*பட்டா( Patta )
 
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை 
குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
 
*சிட்டா( Chitta )
 
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
 
*அடங்கல்( Documents of details of the property )
 
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
 
*கிராம நத்தம்( Land reserved for living )
 
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
 
*கிராம தானம்( Land reserved for common purposes )
 
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
 
*தேவதானம்( Land donated for building temples )
 
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
 
*இனாம்தார்( Owner of land who has donated for public use )
 
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
 
விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு. ( Land Area )
 
நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது. ( Location limits on all four sides )
 
ஷரத்து= பிரிவு.( Part )
 
இலாகா = துறை.( Department )
 
*கிரயம்:
 
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
( Sale Deed registration )
 
*வில்லங்க சான்று ( Encoumbarance Certificate )
 
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின் விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
 
புல எண் = நில அளவை எண். (Survey number)
 
இறங்குரிமை = வாரிசுரிமை (succession right )
 
*தாய்பத்திரம்(Parent deed)
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
 
*ஏற்றது ஆற்றுதல்:
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)
 
*அனுபவ பாத்தியம் ( possession right)
நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.
 
*சுவாதீனம் ஒப்படைப்பு( Handing over of the right )
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
 
ஜமாபந்தி = வருவாய்தீர்வாயம்.
 
நன்செய்நிலம் = ( Fertile Land for cultivation )
அதிக பாசன வசதி கொண்டநிலம்.
 
புன்செய்நிலம் = ( Land depending on rains for cultivation )
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
 
*குத்தகை(Lease)
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

+2 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு 2018 தனித்தேர்வர்களுக்கு அறிவுரைகள் & service centre

GPF / TPF ஆசிரியர்களுக்கு கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்த SMS வரவில்லையா? Register Your Mobile Number Now...



சென்னை AG அலுவலகத்திலிருந்து TPF ஆசிரியர்களுக்கு செப்டம்பர்-2017  வரை உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது,
சரிபார்த்துக்கொள்ளவும்.

வரவில்லையெனில் கைபேசி எண்ணை AG website - ல் பதிவு செய்ய வேண்டும். 

பதிவு செய்ய Click here...

தொடக்கக்கல்வி -அனைத்து மாணவர்களுக்கும் 31.12.1017 க்குள் ஆதார் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்...

இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு கையேடு.pdf

NMMS exam DEC-2017, Date 16-12-2017, Dowload Hall ticket using school user id & password...

website address

EMIS NEWS:தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை...



தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட android application புதன் கிழமை வெளிவரும்.ID card சம்மந்தமான பதிவுகள் அனைத்தும் ஆன்ராய்டு அப்ளிகேஷன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.தற்போது ஆதார் எண் ஏற்கனவே ஏற்றப்பட்டதில் பல விடுபட்டு உள்ளன.எனவே அனைத்தையும் சரிபார்க்கவும்.நம் பள்ளியை விட்டுசென்றவர்களை Transfer செய்யவும்.நம்பள்ளிக்கு வந்தவர்களை search student ல் ஆதார் எண், பிறந்த தேதி அடிப்படையில் தேடி ( நேரடி சேர்க்கையாயினும்) அம்மாணவன் admit வசதி இருப்பின் அப்படியே சேர்க்கவும்.

வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது...



ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.


'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.


தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.