வியாழன், 14 டிசம்பர், 2017

டூப்ளிகேட் PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

PAN Card...

பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.

அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது?

வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.

பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.

டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லதுயூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

 டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களது பெயர்,பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். 

இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும்.

அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.

யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினைரீபிரிண்ட் செய்திட முடியும்.

ஆசிரியர் பயிற்றுனர்களில் 350 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் !



சென்னை:பள்ளிக்கல்வியில், 2005 - 06ல்,ஆசிரியர் தேர்வு வாரியமான,TRB ஆல்நியமிக்கப்பட்ட, 1,039ஆசிரியர் பயிற்றுனர்கள்,வட்டார வள
மையங்களில்பணியாற்றுகின்றனர்.

இவர்களில், மூன்றுஆண்டுகளுக்கு மேல்பணியாற்றுவோருக்கு,ஆசிரியர்களாக பணியிடமாற்றம் வழங்க,பள்ளிக்கல்வி முதன்மைசெயலர், பிரதீப் யாதவ்உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 350 ஆசிரியர்கள்பாடவாரியாக, மாவட்டம்விட்டு மாவட்டம்; ஒன்றியம்விட்டு ஒன்றியம் மாற்றப்படஉள்ளனர். இதற்கானவழிகாட்டுதலை, அனைத்துமாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளுக்கும்,பள்ளிக்கல்வி இயக்குனர்,வழங்கி உள்ளார்.

DEE PROCEEDINGS-RIESI - 30 days English Language Training for primary school Teachers...

புதிய ஊதியப்படி பி.எப் சந்தா...



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.


மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, 2009ல், ஊதியம் உயர்த்தப்பட்டது.


அதன் அடிப்படையில், பி.எப்., மாதாந்திர சந்தாவாக, சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.


இந்த ஆண்டு, 'அலுவலர் குழு - 2017' பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


எனவே, புதிய ஊதியத்தில் அடிப்படை ஊதியம், சிறப்பு ஊதியம், தனி ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்த தொகையில், 12 சதவீதத்தை, வருங்கால வைப்பு நிதியின் மாதாந்திர சந்தாவாக, தொடர்ந்து பிடித்தம் செய்ய வேண்டும்.


மேலும், பொது வருங்கால வைப்பு நிதியில், 12 சதவீதத்திற்கும் மேலாக, மாதச்சந்தா செலுத்திட, தடையேதுமில்லை என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் - DEEO க்கு கோரிக்கை...

63 வகை பதிவேடுகள்-உளைச்சலில் ஆசிரியர்கள்...

தொடக்கநிலை பள்ளிகளில் பின்பற்றப்படும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அட்டவணை...

புதன், 13 டிசம்பர், 2017

13.12.2017-Video Conferencing~SPD's Instructions...



1. I std data entry must be speeded up

2. Aadhaar_Id seeding is compulsory for all children. 

3. Within two or three days  District User will have the opportunity to take out the children's profile from schools where they actually got struck due to reasons irrelevant to EMIS process and functioning.

4. By today evening onwards PDF of class wise data will be with Aadhaar_Id. 

5.Mobile Application will be available in Play store from 15.12.2017.

6. Number of districts accessing the server at a time is split into two.  Hence server's speed is expected to be better. For Mobile APP no timing schedule. 

8. Cosistently follow the pending schools and finish data entry.

9. There was an appreciation from SPD for those already nearing the target.

G.O.No.362 (11/12/2017) - வருங்கால வைப்பு நிதி – ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது...

G.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குதல் திருத்தப்பட்ட அரசாணை!