வியாழன், 28 டிசம்பர், 2017
புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு தலா இரண்டு பள்ளிகள் தேர்வு...
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் வழிகளில் தலா ஒரு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியை தேர்வு செய்து புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வு செய்யப்படும் இந்த பள்ளிகளில் 3ம் பருவத்தேர்வுகளை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வகுப்பு வாரியாக வினாத்தாள்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. டிஜிட்டல் மயமாகும் 3ம் பருவத்தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் படங்கள், வண்ணங்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது.
கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாக்கப்படும். இதற்காக பிரத்யேக ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதன், 27 டிசம்பர், 2017
EMIS APP now working... (Updated in google Play store)
*EMIS APP
*EMIS APP now working...
*Now Update Your EMIS Apps in Google play Store
*Then Login with Your Dise Code & Password
*(Login on- Ur District Scheduled Days)
*Bug fixed and Improved performance
*Gallery & File manager mode enabled
*Crop option enabled in camera mode
செவ்வாய், 26 டிசம்பர், 2017
தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு~ பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு...
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன.
ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை
பாட திட்டத்தில் இடம் பெறும்.
11-ம் வகுப்பு ஊடக தமிழ் பகுதியில், சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் நடைமுறையாகிடும்.
மேலும் சி.பா. ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கனவு ஆசிரியர் விருது அறிவிப்பு...
தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவித்தார்.
மாணவர்களை எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு பாடத்துடன் நற்பண்புகளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)