ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆங்கிலப் புத்தாண்டின் உண்மையான வரலாறு...


இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் உலகம் முழுவதுமுள்ள மக்களால் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் முதல் தினம் ஆங்கிலப் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புத்தாண்டு எப்படி வந்தது என்று கேட்டால் நம்மில் பலரிடம் பதில் இல்லை. வருடத்தின் புதிய தினத்தை வரவேற்கும் நாம், அந்த தினம் எப்படி தோன்றியது என்பதன் வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

*மெசபடோனியர்களின் புத்தாண்டு*

ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.

*ரோமானியர்களின் புத்தாண்டு*

சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அந்த முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.

*ஜீலியன் காலண்டர்*

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது.

*புத்தாண்டு தினத்தில் நிலவிய குழப்பம்*

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவியது.

*கிரிகோரியன் காலண்டர்*

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.

*புதிதாய் பிறந்த புத்தாண்டு கிரிகோரியன்*

 காலண்டர் முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

*அனைவருக்கும்  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...*

இன்றைய(31.12.17) சென்னை, ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளருமான மதிப்புமிகு இனமானக்காவலர். பாவலர்.க.மீ.,அவர்கள் உரையாற்றுகிறார்...

ஆங்கிலப்புத்தாண்டாய் சொல்லப்பட்டாலும் அன்றாட நடைமுறையில் ஏற்றுக்கொண்ட ஆண்டுமுறையாகி விட்டதால் இவ்வாண்டு தொடக்கமும் வாழ்த்துகள் பகிர்ந்துக்கொள்ளும் மரபுகளில் ஒன்றாகிவிட்டது. அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். ~அன்புடன்... முருகசெல்வராசன்

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று(31.12.17)...

வணக்கம்.
 ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று 31.12.17 சென்னையில் தமிழக ஆரம்ப பள்ளி  ஆசிரியர் கூடடணி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. திரு.இரா. தாஸ்,திரு. மு.அன்பரசு தலைமை ஏற்றனர். 

அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.           
1) 6.1.18 அன்று CPS ரத்து அறிக்கை வெளியிடுதல்; பொங்கல் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் காலை மணி 10 முதல் 1 மணி வரை தொடர்முழக்க போராட்டம் நடத்துவது. 

2.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது. 

3) 9.1.18 & 10.1.18 நாட்களில் அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது.    

4)4.2.18 அன்று சென்னையில் CPS ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துவது. அதில் நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்ற உறுப்பினர்,தொழிற்சங்க தலைவர்,ஆகியோரை பங்கேற்க அழைப்பது.

5) ஜனவரி மாதம் மதுரையில்  நடைபெற உள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர்மறியல் போராட்டத் தேதியை அறிவிப்பது.

6) வழக்கு மற்றும் போராட்ட நிதி சங்கத்திற்கு ரூ. 20000/_ என முடிவு செய்யப்பட்டது.

இவண். ஜாக்டோ-ஜியோ ,ஒருங்கிணைப்பாளர்கள்.

சனி, 30 டிசம்பர், 2017

District wise abstract list of EMIS report for 29-12-2017....

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு...


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன.
இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பஞ்சாயத்து தலைவர் முதல், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட, கவுன்சிலர், எம்.எல்.ஏ., ஆகியோரையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.இதன்மூலம், பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சாராம்சத்தை பொதுமக்களுக்கு, இவ்விழா நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
515 பள்ளிகளுக்கு...எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 80, 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக, நிதித்தொகை பிரித்தளிக்கப்படும். இதேபோல், 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாக, நிதியுதவி அளிக்கப்படும்.

இதன்படி, 254 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 261 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வட்டார வளமையங்களுக்கு பிரித்தளித்து, அந்தந்த பள்ளி மேலாண்மை குழு பெயரில், காசோலையாக வழங்கப்படும்.ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆண்டு விழா கொண்டாட, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

தனித்தேர்வர்களுக்கு அவகாசம்-அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...


10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாக்கல் முறையில் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவித்த கால அவகாசம்  நிறைவடைந்துவிட்டது.

ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜன.2 முதல் ஜன.4-ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

'கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு...


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு
பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.

ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.