சனி, 6 ஜனவரி, 2018

6,029 பள்ளிகளில் 'ஹைடெக்' ஆய்வகங்கள் ~பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்…


''மாநிலம் முழுவதும், 6,029 அரசு பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை காட்டிலும் சிறப்பாக இருக்கும். மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், 60 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும். 

பள்ளிகளில் கட்டமைப்பு மேம்படுத்த, மத்திய அரசிடம், 500 கோடி ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளோம். புதிய பாடத்திட்டத்தில், 72 தொழிற்கல்வி பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் ஐந்து கோடி ரூபாய் பங்களிப்புடன், சிறப்பு பயிற்சிகள் தர உள்ளோம். மேலும், 6,029 பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர, 'ஹைடெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களில், போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுவோருக்கு, ஒரு லட்சம் லேப்டாப்கள், பொது தேர்வுக்கு முன்பே வழங்கப்பட உள்ளன. தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசிடமிருந்து, 2,200 கோடி ரூபாய், தமிழகத்துக்கு வரவேண்டி உள்ளது; அதை பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

வடமாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில், 2013 முதல் தேர்ச்சி பெற்றவர்கள், 92 ஆயிரத்து, 620பேர் உள்ளனர். அவர்கள் தேர்ச்சி பெற்றது முதல், ஏழு ஆண்டுகள், அதாவது, 2020 வரை அரசு பணியில் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2018ம் ஆண்டிற்கான TNPSC அட்டவணை...


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2015-ம் ஆண்டில் 12 தேர்வுகள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்து 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.2016-ம் ஆண்டில் 17 தேர்வுகளை நடத்தி 6 ஆயிரத்து 383 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

கடந்த ஆண்டில் 12 ஆயிரத்து 218 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் கூடுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளுக்கும் சேர்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டன.

மீதமுள்ள 6 தேர்வுகள் இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன.மேலும் கடந்த 2 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டி தேர்வுகள் தொடர்பான, 99 பாடத்திட்டங்கள் வல்லுனர் குழு கொண்டு மேம்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பல்வேறு வகையான 23 பதவிகளில் 3 ஆயிரத்து 325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வு மூலம் 1,547 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

 இதற்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-1 தேர்வில்57 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இந்த காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்கு பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.

TEACHER'S PROFILE FORM...

DEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு...

வெள்ளி, 5 ஜனவரி, 2018

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! , பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி...


வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.

பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மாவட்டத்திற்கு ஆறு கனவு ஆசிரியர் விருது வழங்குதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

இந்திய நிதி அமைச்சகத்தின் வருமானவரி சார்ந்த சுற்றறிக்கை...

தொழில்வரி விலக்கு அளிக்கப்பட்டோர் விபரம்...

பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர் கால்குலேட்டர் அனுமதி...


பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர்
கால்குலேட்டர் கொண்டு வரலாம் என 
அருவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர், பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. 

பிளஸ் 2 மாணவர்களில் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் 'லாக்ரதம் டேபிள்' புத்தகம் கொண்டுவர வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு எழுதுவோர் முழு கிராப் பேப்பரும் கொண்டுவர வேண்டும். புள்ளியியல் தேர்வு எழுதும் மாணவர்கள் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு சாதாரண 'கால்குலேட்டரும்', இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு 'லாக்ரதம் டேபிள்' புத்தகமும் கொண்டு வர வேண்டும். 

அதேபோல் வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் கொண்டு வரலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுவரை மாணவர்கள் தேர்வறைக்குள் கால்குலேட்டர் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

06.01.18~நாமக்கல்~ஜாக்டோ-ஜியோவின் தொடர்முழக்கப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்...


ஜாக்டோ-ஜியோவின் நாமக்கல் மாவட்டக்கூட்டம்
 (04.01.18-வியாழன்)பிற்பகல் 05.00மணிக்கு நாமக்கல் எஸ்.பி.எம்.,மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மன்றத்தின் மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் ப.இராசேந்திரன்(சேந்தமங்கலம்),
மாநிலத்தீர்ப்புக்குழு உறுப்பினர் இரா.பன்னீர்செல்வம்(புதுச்சத்திரம்),
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் இரா.இரவிக்குமார்
(கபிலர்மலை),மாவட்டத்துணைச்செயலாளர் வெ.வடிவேல்(பள்ளிப்பாளையம்),நாமக்கல் ஒன்றியச்செயலாளர் அ.ஜெயக்குமார்,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் த.தண்டபாணி ஆகியோர்பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் வரும் (06.01.18-சனிக்கிழமை)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலந்தழுவியதொடர்முழக்கப்போராட்டம்
மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.

இக்கூட்ட முடிவினை வெற்றிகரமாக்குமாறும்,போராட்டக்களத்தில் முழு வீச்சுடன் செயலாற்றுமாறும்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிப்பொறுப்பாளர்களை,இயக்க முன்னோடிகளை,மன்ற ஆசிரியப்பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
~முருகசெல்வராசன்.