செவ்வாய், 9 ஜனவரி, 2018

G.O.MS.NO.6/ Fin/ 6.1.2018 பொங்கல் போனஸ் அரசாணை வெளியீடு...

G.O.MS.NO.6/ Fin/ 6.1.2018

*NO bonus for A & B officers.

*Rs.3,000/- bonus only for C& D Staffs. 


HRA-கிரேடு 2 ஆக உயர்த்தி வெளியிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகள்...

மொபைல் போனில் இனி அரசு சேவைகள்...


தமிழக அரசு, 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் போன் வழி, இணைய சேவைகளுக்கு இனி முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளும், இணையதளங்களில் தக்க மாற்றங்களை செய்வதுடன், மொபைல் போன் செயலிகளையும் உருவாக்கவுள்ளன.

அனைத்து அரசு சேவைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை, பொது சேவை மையங்கள் மூலம் தருவதற்கு, மத்திய அரசு, தேசிய அளவிலான கொள்கை வகுத்துள்ளது. அதையொட்டி, தமிழக அரசும், அதன் திட்டங்கள் மற்றும் சேவைகள், மக்களை வேகமாக சென்றடையும் வகையில், ஐ.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப துறைக்கு, தனி கொள்கை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:ஐ.டி., சட்டம், 2000ல், அனைத்து அரசு சேவைகளும், மின்னணு முறையில் மக்களுக்கு தரப்பட வேண்டும். அதன்படி, வரும், 2023க்குள், அரசு சேவைகள் அனைத்தும், இ - சேவை மையங்கள் வாயிலாகவும், பல்வேறு இணைய பயன்பாடுகள் வாயிலாகவும், மக்களுக்கு தருவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொபைல் போன்கள் பெருகியுள்ளதால், 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் வழி சேவைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே, மொபைல் போன் வழியாக, அரசு சேவைகளை மக்களுக்கு வழங்க, அனைத்து அரசுத் துறைகளும் ஊக்குவிக்கப்படும்; மொபைல் போனில் பயன்பாடுகளை பெறும் வகையில், அந்தந்த துறையின், இணையதள தொழில்நுட்ப அமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அதற்கேற்ப, மொபைல் செயலிகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7-வது ஊதியத் திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்க குழு~ஆளுநர் உரையில்...

TN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி...


TN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள) ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

India~Post Office~Jobs 2018!


Post and Vacancies :-

Assistant Accounts Officer – 607

Job Location: Across India

Education Qualification: Any Graduate

Eligibility: The period of deputation shall not exceed three years and will be initially for a period of one year and can be extended for two more years, on yearly basis, if required, in the exigencies of public service The pay and terms and conditions of deputation of the officer selected shall be regulated in terms of Ministry of Personnel Public Grievances and Pension (Department of Personnel and Training) OM No.2/29/91-Estt(Pay II) dated 5.1.1994, DOP&T OM No.A13 .14017/30/2006-Estt.(RR) dated 29.11.2006, O.M. No.216/2009-Estt.(Pay II) dated 25.2.2009 and OM No.6/8/2009Estt.(Pay II) dated 17.6.2010 and other rules and instructions on deputation from one Government Department to another, as amended from time to time. The eligible officers/officials may apply as per the application format enclosed

Age Limite: The age of the applicant shall not exceed 56 years as on closing date of receipt of application.

Salary:

Assistant Accounts Officer :- Rs. 9,300 – Rs. 34,800/- Per Month

Selection Procedure:

Selection Will be Based either Written Exam/Interview

Address:

Department of Posts, Postal Accounts Wing, Dak Bhavan, New Delhi. 110 001

How to Apply :-

The application from the willing and eligible officials/officers whose services can be spared may be sent, duly recommended by Head of Office/Head of Department alongwith attested copy of ACR/APARs for the last 5 years, integrity certificate and vigilance clearance report, as per Annexure D, so as to reach the undersigned on or before 15th January 2018.The applications received after the due date will not he entertained and are liable to be rejected.

Important Dates:

Closing Date:- 15/01/2018

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகளை கபிலர்மலை உதவித்தொடக்கக் கல்வி அலுவலருக்கு தெரிவித்தல்(8-1-18)~நிகழ்வுகள்...

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகளை கபிலர்மலை உதவித்தொடக்கக்
கல்வி அலுவலருக்கு தெரிவிக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை ஒன்றியத்தலைவர் ந.மணிவண்ணன்,
செயலாளர் மெ.சங்கர்,
பொருளாளர் த.தண்டபாணி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் 
திரு. பொ.முத்துசாமி, நாமக்கல்மாவட்ட
இணையக்குழு துணை அமைப்பாளர் இர.மணிகண்டன் மற்றும் நாமக்கல் மாவட்டச்செயலாளர்
திரு.முருகசெல்வராசன்.

'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை...


கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூடுதல் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு:

அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாக பணிகளில், தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்த கூடாது.

தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு, அரசின் விரைவு தபால் சேவையான, 'ஸ்பீட் போஸ்ட்'டில் இருப்பது போன்ற விதிகள் இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை- தொலைந்த சான்றிதழ் பெற எளிய முறை அறிமுகம்...


அரசு தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கல்லுாரி மற்றும் பல்கலைக கழகங்களின் மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை தொலைத்தால், போலீசில் புகார் அளித்து, அதற்கான உறுதி சான்று பெற வேண்டும். அந்த சான்றுடன், பல்கலை மற்றும் கல்லுாரிகளில் விண்ணப்பித்து, சான்றிதழ் நகல்களை பெறலாம். 
போலீசில் புகார் அளித்து சான்றிதழ் பெறுவதில், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், பலர் சான்றிதழ் நகல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொலைந்த சான்றிதழின் நகல்களை பெற, எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி, ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை காட்டினால், மாணவர்களுக்கு சான்றிதழ் நகல் தரலாம் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம், பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பெரியார் பல்கலை உள்ளிட்ட, பல பல்கலைகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.