திங்கள், 15 ஜனவரி, 2018

சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?


நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. 

மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன.

சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 

இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

WhatsApp ல் வந்தாச்சு மேலும் ஒரு புதிய 'Update'...


பிரபல மெசேஜிங் தளமான  வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது.

அதாவது குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை 'டிமோட்' அல்லது 'டிஸ்மிஸ்' செய்யுமாறு புதிய வாட்ஸ்அப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விஷயமொன்றும் உள்ளது. 
டிமோட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பங்கேற்பாளரை ஒரு சாதாரண மெம்பராக 'ஆட்' செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் அவரை அனுமதிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு (பீட்டா வி2.18.12) மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் சோதனையில் உள்ளது. 

தற்போதைய வாட்ஸ்ஆப் அம்சங்களின் படி, குறிப்பிட்ட நபரை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றால், அட்மின் ஆனவர் அவரை நேரடியாக நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் அவரைச் சேர்க்க வேண்டுமென்றால் புதிய நபராகத்தான் சேர்க்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. 

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டில், குழு நிர்வாகிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பதோடு, மற்ற அனைத்து உறுப்பினர்களும் உரை செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள், ஆவணங்கள் அல்லது குரல் செய்திகளை அனுப்புவதைத் தடுப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்...


மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அவர் கூறியதாவது:தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 
இந்த மாத இறுதிக்குள், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு, கட்டணம் இல்லாமல் பயிற்சி பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏழை, எளியமாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, கற்றல் குறைபாடுள்ளவர்களின் நிலைமையை மாற்றி அமைக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.


கற்றல் குறைபாட்டைதீர்க்கும் வகையில், பில்கேட்ஸ் நிறுவனம் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

MADURAI KAMARAJ UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020...


Cost of Application- RS.1000/- 

Programme Fee- RS.18,500/- Per Year 

Last date to submit the application - 28.02.2018 

For more..

For Prospectus click here...

'இஸ்ரோ' புதிய சாதனை ~100வது பயணம் வெற்றி…


இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய, 100வது செயற்கைக்கோள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து திட்டமிடலுக்கு உதவும், 'கார்டோசாட் - 2' உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்களுடன், பல்வேறு நாடுகளின், 28 செயற்கைக்கோள்களும், இந்த பயணத்தின் போது செலுத்தப்பட்டன.

இஸ்ரோ, 1975ல், முதல் செயற்கைக்கோளை செலுத்தியது. அந்த வரிசையில், 100வது செயற்கைக்கோளை நேற்று செலுத்தி சாதனை படைத்துள்ளது. பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் மூலம், கார்டோசாட் - 2 உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்கள், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 28 செயற்கைக்கோள்கள் என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

கடந்த, 2017 ஆகஸ்டில், பி.எஸ்.எல்.வி., - சி 39 ராக்கெட், தொழில்நுட்பக் காரணங்களால் பயணத்தை துவங்குவதற்கு முன், தோல்வியில் முடிந்தது. அதனால், நேற்றைய செயற்கைக்கோள்கள் ஏவுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், விரைவில் ஓய்வு பெற உள்ள, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தலைமையில் நடக்க உள்ள, கடைசி செயற்கைக்கோள் ஏவுதல் இதுவாகும்.

ஆந்திராவின், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள, இஸ்ரோவின் விண்வெளி மைய தளத்தில் இருந்து, நேற்று காலை, 9:28 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, 17 நிமிடத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில், கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மற்ற செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிறுத்தப்பட்டன.

கார்டோசாட் வகை செயற்கைக்கோள்களில், இது, ஏழாவது செயற்கைக்கோளாகும். இதில், பூமியின் குறிப்பிட்ட பகுதியை படம் பிடித்து அனுப்பும் கேமராக்கள் உள்ளன. இது, நகர மற்றும் கிராமப்புற மேம்பாடு, போக்கு வரத்து மேம்பாடு, ரயில், சாலை போக்குவரத்து திட்டமிடல், கடலோர நிலப்பகுதியை முழுமையாக பயன்படுத்த திட்டமிடல் போன்றவற்றுக்கு உதவுகிறது.

''இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, நாட்டு மக்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசு,'' என, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில், 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?


எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....

ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)

கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்

திருநெல்வேலி - அல்வா

ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

கோவில்பட்டி - கடலைமிட்டாய்

பண்ருட்டி - பலாப்பழம், முந்திரி

மார்த்தாண்டம் - தேன்

பவானி - ஜமுக்காளம்

உசிலம்பட்டி - ரொட்டி

நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

பொள்ளாச்சி - தேங்காய்

ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்

வேதாரண்யம் - உப்பு

சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா

சாத்தூர் - காராசேவு, மிளகாய்

 விருதுநகர் - சீனி மிட்டாய், புரோட்டா

தூத்துக்குடி - மக்ரூன், பன்

மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து

திருப்பதி - லட்டு

மாயவரம் - கருவாடு

திருப்பூர் - பனியன், ஜட்டி

கும்பகோணம் - வெற்றிலை சீவல்

தர்மபுரி - புளி, தர்பூசணி

ராஜபாளையம் - நாய்

தூத்துக்குடி - உப்பு

ஈரோடு - மஞ்சள், துணி

தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை

பெல்லாரி - வெங்காயம்

நீலகிரி - தைலம்

மங்களூர் - பஜ்ஜி

கொல்கத்தா - ரசகுல்லா

ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - ஓலைக்கூடை

செட்டிநாடு - பலகாரம்

திருபுவனம் - பட்டு

குடியாத்தம் - நுங்கு

கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்

ஆலங்குடி - நிலக்கடலை

கரூர் - கொசுவலை

திருப்பாச்சி - அரிவாள்

காஞ்சிபுரம் - பட்டு, இட்லி

மைசூர் - பட்டு, பத்தி, சந்தனம்

நாகப்பட்டினம் - கோலா மீன்

திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்

பத்தமடை - பாய்

பழனி - பஞ்சாமிர்தம், விபூதி

மணப்பாறை - முறுக்கு, மாடு

உடன்குடி - கருப்பட்டி

கவுந்தாம்பட்டி - வெல்லம்

ஊத்துக்குளி - வெண்ணெய்

கொடைக்கானல் - பேரிக்காய்

குற்றாலம் - நெல்லிக்காய்

செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா

சங்கரன் கோவில் - பிரியாணி

அரியலூர் - கொத்தமல்லி

சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை

கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்

பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்

திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்

காஷ்மீர் - குங்குமப்பூ

ஆம்பூர் - பிரியாணி

ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி

ஓசூர் - ரோஜா

நாமக்கல் - முட்டை

பல்லடம் - கோழி

உடுப்பி - பொங்கல்

குன்னூர் - கேரட்

பாலக்காடு - பலாப்பழம்...

 ஆற்காடு - மக்கன்பேடா

 வாணியம்பாடி - தேனீர்

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?


பொங்கல் பண்டிகை முடிந்து  மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு  பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம். காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும்.

கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் பெரும்பாலான ,கிராமப்புறங்களில் இந்த அவதிகள் கிடையாது. அங்கு பெரியவர்கள்,கரும்பு தின்னும் குழந்தைகளிடம்,

'தண்ணிய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்'

என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால்,வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.

ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது?

கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.

அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"
என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே,இந்த சிறு விழிப்புணர்வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.

செந்தமிழில் தமிழ் ஆண்டு பெயர்கள் (60)...


 வடமொழி பெயர்களுக்கு  செந்தமிழ் பெயர்கள்:

1) பிரபவ - நற்றோன்றல்

2) விபவ - உயர்தோன்றல்

3) சுக்கில - வெள்ளொளி

4) பிரமோதூத - பேருவகை

5) பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்

6) ஆங்கிரச - அயல்முனி

7) ஸ்ரீமுக - திருமுகம்

8) பவ - தோற்றம்

9) யுவ - இளமை

10) தாது - மாழை

11) ஈஸ்வர - ஈச்சுரம்

12) வெகுதான்ய - கூலவளம்

13) பிரமோதி - முன்மை

14) விக்ரம - நேர்நிரல்

15) விஜு - விளைபயன்

16) சித்ரபானு - ஓவியக்கதிர்

17) சுபானு - நற்கதிர்

18) தாரண - தாங்கெழில்

19) பார்த்திப - நிலவரையன்

20) விய - விரிமாண்பு

21) சர்வசித் - முற்றறிவு

22) சர்வதாரி - முழுநிறைவு

23) விரோதி - தீர்பகை

24) விக்ருதி - வளமாற்றம்

25) கர - செய்நேர்த்தி

26) நந்தன - நற்குழவி

27) விசய - உயர்வாகை

28) சய - வாகை

29) மன்மத - காதன்மை

30) துன்முகி - வெம்முகம்

31) ஏவிளம்பி - பொற்றடை

32) விளம்பி - அட்டி

33) விகாரி - எழில்மாறல்

34) சார்வரி - வீறியெழல்

35) பிலவ - கீழறை

36) சுபகிருது - நற்செய்கை

37) சோபகிருது - மங்கலம்

38) குரோதி - பகைக்கேடு 

39) விசுவாவசு - உலகநிறைவு

40) பராபவ - அருட்டோற்றம்

41) பிலவங்க - நச்சுப்புழை

42) கீலக - பிணைவிரகு

43) செளமிய - அழகு

44) சாதாரண - பொதுநிலை

45) விரோதிகிருது - இகல்வீறு

46) பரிதாபி - கழிவிரக்கம்

47) பிரமாதீச - நற்றலைமை

48) ஆனந்த - பெருமகிழ்ச்சி

49) இராட்சச - பெருமறம்

50) நள - தாமரை

51) பிங்கள - பொன்மை

52) காளயுத்தி - கருமைவீச்சு

53) சித்தார்த்தி - முன்னியமுடிதல்

54) ரெளத்ரி - அழலி

55) துன்மதி - கொடுமதி

56) துந்துபி - பேரிகை

57) ருத்ரோத்காரி                  -                  ஒடுங்கி

58) ரக்தாட்சி               -

        செம்மை

59) குரோதன            -    

       எதிரேற்றம்

60) அட்சய                    -

       வளங்கலன் 
------------------------

2018+31=2049 (திருவள்ளுவராண்டு) தொடங்குகிறது...


தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் கூடி  ஆராய்ந்தார்கள்.

 இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் எடுத்த முடிவுகளில்
மிக முக்கியமானது,
முதன்மையானது,
குறிப்பிடத் தக்கது எது என்றால்,
அது தான் திருவள்ளுவர் ஆண்டு முடிவு. 

அவை:
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது;

 அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது;

 திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை;
 இறுதித் திங்கள் மார்கழி.
 புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். 

திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2018 + 31 = 2049)  என்று அந்நாளில் முடிவு செய்தனர்.

 கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; 
புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!


பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடும் பண்டிகையாகும். 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது.

இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான  நாளாகும்.

மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். 

நான்காம் நாளான காணும் பொங்கல் அன்று வெளி இடங்களுக்கும், உறவினர்கள் இல்லங்களுக்கும் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

போகி:-

போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால்  கொண்டாடப்படும் விழாவாகும். போகி பண்டிகை என்பது 'மார்கழி' மாதத்தின் இறுதி நாளாகும். பழையன கழிந்து புதியது  புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக,  கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.

மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள்  இந்திரவிழாவை முடித்து சூரிய வழிபாடை தொடர்ந்தனர். 

தைப்பொங்கல்:-

தைப்பொங்கல்  தமிழர்களால்  சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தமிழர் திருநாளாக தமிழர்களாலும்,  தமிழர் வாழும் அனைத்து  நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றி தெரிவிக்க கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை  மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள்  வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.

மாட்டுப் பொங்கல்:-

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயலை உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய்  கொடுக்கவும், காரணமாக இருக்கும் எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம்,  சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவனுக்கு துணையாக இருந்த  கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல்  என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை  சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்  உண்ணுவதற்கு வழங்கப்படும்.

காணும் பொங்கல்:

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி  பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நடத்துவதுண்டு, குறிப்பாக ஜல்லிக்கட்டு, பட்டி மன்றம், உரி  அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில்  முகத்தில் பூசிக்கொள்வார்கள்

இவ்வாறு நான்கு நாள் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது...