புதன், 17 ஜனவரி, 2018

தேர்வின் பெயர்களும் தேதியும்...

அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ்~அமைச்சர் தகவல்...


மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.3.68 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்க்கு தண்டனை வழங்க புதிய சட்டம்~ மத்திய அரசு முடிவு…


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்க்கு தண்டனை வழங்க புதிய சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய கல்வி ஆலோசனைகுழுவின் 65வது கூட்டம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவருக்கும் கல்விசட்டம் 2009ஐ திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

படைப்பாற்றல் கல்வி முறை~ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.…


தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல் கல்வி முறை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், பாடங்கள் வரைபடம் வாயிலாக, கற்பிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், படைப்பாற்றல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி வழங்க, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, ஒரே கட்டமாகவும், ஆறு முதல் எட்டு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரு கட்டங்களாகவும் பயிற்சி நடத்தப்படுகிறது. 

இதை, ஜன., 25க்குள் நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 16 ஜனவரி, 2018

முக அடையாளத்தால் ஆதாரை சரிபார்க்கும் புதிய வசதி அறிமுகம்...


முகத்தைக் காட்டி, அதன் அடையாளத்தை வைத்து, ஆதார் விபரத்தை சரிபார்க்கும் புதிய வசதியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் அடையாள அட்டைகளை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி உள்ளது. மத்திய அரசு வழங்கும், பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கும் ஆதார் முக்கிய தேவையாக மாறி வருகிறது.

பயோ மெட்ரிக்:

மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்குவதற்கும், ஆதார் மூலம், பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைப்பது எளிதாகிறது. தற்போது, சம்பந்தப்பட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவற்றை வைத்து, அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அம்சங்களுடன், சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை படம் பிடித்து, சரிபார்க்கும் வசதியையும், ஆதார் ஆணையம் அனுமதிக்க உள்ளது.

இந்த வசதி, கைவிரல் ரேகை, கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவுகளை வைத்து, சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமம் இருப்போருக்கு பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

வயதாவதாலும், கடுமையான வேலைகள் செய்வதாலும் ஏற்படும் கைவிரல் ரேகை தேய்மானம், கருவிழி ரேகையில் மாற்றம் போன்ற காரணங்களால், அவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவரை உறுதி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

விர்ச்சுவல் ஐ.டி:

அத்தகைய சூழலில், அந்த நபரின் முகத்தை படம் பிடித்து, அதை, ஆதார் பயோமெட்ரிக் தகவல்களுடன் சரிபார்க்கும் பணி நடைபெறும். முக அடையாளத்தை, தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு அல்லது கருவிழி ரேகை பதிவு அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை அனுப்பும், 'பாஸ்வேர்டு' ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.

இத்திட்டம், ஜூலை, 1 முதல் பயன்பாட்டுக்கு வரும். சம்பந்தப்பட்ட நபரின் தேவை அடிப்படையில், இந்த புதிய வசதி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டையில் தரப்படும், 12 இலக்க எண்ணிற்கு பதில், 'விர்ச்சுவல் ஐ.டி.,' எனப்படும் புதிய வசதியை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அந்த வசதி, மார்ச், 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த, ஐ.டி.,யை, டிஜிட்டல் முறையில், 16 இலக்க எண்ணாக உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு முறை பயன்படுத்திய பின், வேறு புதிய ஐ.டி.,யை உருவாக்கும்போது, பழைய ஐ.டி., எண் ரத்தாகி விடும். 'இதன் மூலம், ஆதார் எண்ணை, யாரிடமும் தெரிவிக்கும் அவசியம் எழாது' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறி இருந்தது.

தகவல்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்' வசதி : 

ஆதார் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் புகார்களை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருப்பினும், ஆதார் தகவல்களுக்கு, பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக் லாக்' எனப்படும், டிஜிட்டல் பூட்டை, யு.ஐ.டி.ஏ.ஐ., உருவாக்கி உள்ளது. இதை பயன்படுத்தி, ஆதார் தகவல்களை, தேவைப்படும்போது, அதன் உரிமையாளர், 'லாக்' செய்ய முடியும். தேவைப்படும்போது, அதை திறந்து, அதில் உள்ள தகவல்களை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற ஏஜன்சிகள் பார்க்க அனுமதிக்கலாம். பயோமெட்ரிக் லாக்கை, ஆதார் ஆணைய இணையதளத்தில் நுழைந்து, அதற்கான டிஜிட்டல் படிவத்தில், ஆதார் எண்ணை பதிவு செய்து பெறலாம். இந்த வசதியை பெற, ஆதாருடன் பதிவு செய்த, மொபைல் போன் எண் அவசியம்.

வட்டார வள மைய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு ஆதார் எடுக்க பயிற்சி...

அரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்...

திங்கள், 15 ஜனவரி, 2018

சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?


நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. 

மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன.

சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 

இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

WhatsApp ல் வந்தாச்சு மேலும் ஒரு புதிய 'Update'...


பிரபல மெசேஜிங் தளமான  வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது.

அதாவது குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை 'டிமோட்' அல்லது 'டிஸ்மிஸ்' செய்யுமாறு புதிய வாட்ஸ்அப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விஷயமொன்றும் உள்ளது. 
டிமோட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பங்கேற்பாளரை ஒரு சாதாரண மெம்பராக 'ஆட்' செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் அவரை அனுமதிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு (பீட்டா வி2.18.12) மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் சோதனையில் உள்ளது. 

தற்போதைய வாட்ஸ்ஆப் அம்சங்களின் படி, குறிப்பிட்ட நபரை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றால், அட்மின் ஆனவர் அவரை நேரடியாக நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் அவரைச் சேர்க்க வேண்டுமென்றால் புதிய நபராகத்தான் சேர்க்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. 

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டில், குழு நிர்வாகிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பதோடு, மற்ற அனைத்து உறுப்பினர்களும் உரை செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள், ஆவணங்கள் அல்லது குரல் செய்திகளை அனுப்புவதைத் தடுப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்...


மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அவர் கூறியதாவது:தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 
இந்த மாத இறுதிக்குள், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு, கட்டணம் இல்லாமல் பயிற்சி பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏழை, எளியமாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, கற்றல் குறைபாடுள்ளவர்களின் நிலைமையை மாற்றி அமைக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.


கற்றல் குறைபாட்டைதீர்க்கும் வகையில், பில்கேட்ஸ் நிறுவனம் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.