வியாழன், 25 ஜனவரி, 2018

இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தின் 6 மையங்களில் எதிர்வரும் 31.01.2018 (புதன்) பிற்பகல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்...

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக்கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள  உறுப்பமைப்புகள் தனி சங்க நடவடிக்கைகள்,
வழக்காடுதல் போன்றன மேற்கொள்வது சிறந்தசெயலாகாது என ஏற்படுத்திக்கொண்ட பொதுமுடிவின் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோபேரமைப்பினையும்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக் கோரிக்கைகளையும்  வலுப்படுத்திடும் வகையினில்,
கெட்டிப்படுத்திடும் நிலையினில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஜாக்டோ-ஜியோவின் 
பொதுக்கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் அளவில் பொதுப்போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்று வெற்றிபெறச்செய்வதென தொடர்ந்து  செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் 21.01.2018 அன்று சென்னையில்  கூடிய ஆசிரியர்மன்றத்தின்
மாநிலச்செயற்குழு கீழ்க்கண்ட  இரண்டுஅம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து   தமிழகத்தின்  
6மையங்களில்
(திருநெல்வேலி,
மதுரை,திருச்சி,
கோயமுத்தூர்,
சேலம் மற்றும் வேலூர்) எதிர்வரும் 31.01.2018 (புதன்)பிற்பகல்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென
முடிவாற்றி உள்ளது.

இரண்டு 
அம்சக்கோரிக்கைகள்:

அ) மிகைஊதியம்  பிரிவு அ மற்றும் ஆ பிரிவு ஆசிரியர் -அரசு அலுவலருக்கு   வழங்கப்படல் வேண்டும்.

ஆ) கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரப்படல்  வேண்டும்.

மேற்கண்ட இரண்டு அம்சக்கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 31.01.2018(புதன்)
05.00 மணியளவில்
பிற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம நடைபெறுகிறது.

இவ்வார்ப்பாட்டத்தில்   கிருட்டிணகிரி,தருமபுரி ,சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச்
சார்ந்த மாநில ,மாவட்ட,ஒன்றிய,நகரக்கிளைப்பொறுப்பாளர்கள்,
மன்ற முன்னோடிகள் ,
மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் பெருந்திரளாய் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள்,ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்கள் சக்திமிக்கதாய் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச்செயலாளர்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்,தமிழகமேலவையின் முன்னாள் உறுப்பினர் ,பாவலர்அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் படி நின்று தமிழ்ச்சமுதாயத்திற்க்கு பெருநன்மை தரவல்ல கோரிக்கைகளில்
ஒன்றான  கல்விமாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றிபெறச்செய்வீர்.
                 நன்றி.
           ~முருகசெல்வராசன்.  

69-வது குடியரசு தின விழா~பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வை பிப்ரவரி-13 க்குள் நடத்த உத்தரவு...


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை வருகிற பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 
இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து செய்முறை தேர்வுகளை வரும் பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.மேலும் 14ம் தேதி மதிப்பெண் அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆலோசனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதன், 24 ஜனவரி, 2018

INSPIRE AWARD 2017 - 18, Selected Students List Published ( All District )...

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில் 12-06-1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்...

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்-ஜனவரி 28 மற்றும் மார்ச் 11-பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல்- நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

GO No: 2 for Smart Class Rooms for 3000 Primary and Middle schools...

UGC-National Eligibility Test (NET)-Notification-2018....

படைப்பாற்றல் கல்வி முறை (ALM)...


படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology)

அறிமுகம் :

 படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. 

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான  நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளடைவில் பிறபாடங்களும் இம்முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

படைப்பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.

படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும்.

அவை, 

அறிமுகம் : (10 நி)

முந்தைய பாடங்களில் தொடர்புடைய கருத்துகள் இருப்பின் அதனை நினைவுகூர்ந்தும், ஆர்வமூட்டும் செயல்பாடுகளின் வாயிலாகவும் பாடத்தினை அறிமுககப்படுத்துதல்.

படித்தல்: (10 நி)

பாடப்பகுதியை முதலில் ஆசிரியர் படித்தல். பின்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவர் படித்தல். மாணவர் அடிக்கோடிட்ட புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். (மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்).

மனவரைபடம்: (15 நி)

பாடக்கருத்துக்கு ஏற்ற மன வரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மன வரைபடத்தை வழங்குதல். விடுபட்ட கருத்துகளுடன் ஆசிரியர்தம் மன வரைபடத்தினை வழங்குதல்.

தொகுத்தலும் வழங்குதலும்(10 நி)

 பாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் தொகுத்தல்...

1.வார்த்தை வலை(Word web

2. அட்டவணை(Tables).

3. குறிப்புகள்(Hints).

4. வரிசைமுறையில் எழுதுதல்.

5. படங்கள் வரைதல்.

6. உண்மைத் தகவல்கள்.

7. காலங்கள்.

8. மீன்முள்

9.தகவல் பலகை

மாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.

வலுவூட்டுதல்: (15 நி)

பாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல்.

மதிப்பீடு: (15 நி)

 மாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.

குறைதீர் கற்றல்: (15 நி)

கற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.

எழுதுதல்:

பாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.

தொடர்பணி...

பாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

சிறப்புக்கள்:

படைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாகவும் இம்முறையானது கருதப்படுகிறது.

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி தமிழக முதல்வர் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடிதம்...