திங்கள், 5 பிப்ரவரி, 2018

10th & +2 சான்றிதழ்கள்-உண்மைத்தன்மை- திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

பிசியோதெரபி~பேச்சுப் பயிற்சி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

பாவலர் அழைக்கிறார்...


*10/2/18 சனிக்கிழமை காலை 10மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெறயுள்ளது.

*அந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.

பொருள்: 

வரும் பிப்ரவரி 21 முதல் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல்  போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளவேண்டிய  தொடர்பணிகள் குறித்து அலோசனைக்கூட்டம்

இடம்:

சிதம்பரம்,
பெல் காம் சத்திரம்,
மேலவிதி,
உடுப்பி உணவகம் எதிர் வரிசை,
சிதம்பரம்.

தகவல்:
மன்றம்-மு.மோகன்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரியுங்கள், வரியைக் குறையுங்கள்...


பணமதிப்பு நீக்கமும் பொதுச் சரக்கு-சேவை வரி அமலும் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது. 

நேர்முக, மறைமுக வரி வசூல் அதிகரிப்பு இதைக் காட்டுகிறது. பொருளாதாரத்தை 'முறைசார்ந்த அமைப்பு'க்குக் கொண்டுவருவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற இரண்டு நோக்கங்களும் நிறைவேறிவருகின்றன. 

2015-16 நிதியாண்டில் 5.9 கோடிப் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல்செய்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 1.01 கோடி மேலும் உயர்ந்துள்ளது.

தனிநபர்கள் செலுத்தும் வருமான வரி அளவு 2017-18 நிதியாண்டில் ஜிடிபி மதிப்பில் 2.3% ஆக உயர்ந்து வரலாறு படைக்கவிருக்கிறது. 2013-14 நிதியாண்டு முதல் 2015-16 நிதியாண்டு வரையில் இது ஜிடிபியில் 2% ஆகவே இருந்தது. நாட்டு மக்களில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வெறும் 4%. ஆனால், இது 23% ஆக இருக்க வேண்டும். எனவே, சிறிய அளவிலான இந்த எண்ணிகை அதிகரிப்பு, எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த முதல் ஆறு மாதங்களில் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50% அளவுக்கு உயர்ந்திருக் கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு முன்னால் நாடு முழுக்க 65 லட்சம் பேர்தான் வணிக வரி செலுத்தினர். இப்போதும்கூட எல்லோருமே தங்களைப் பதிவுசெய்து முடித்துவிடவில்லை. இது வளரும்போது வரிக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதாச்சாரம் அதிகரித்து, பேரியல் பொருளாதாரக் காரணிகளை மேலும் வலுப்படுத்தும்.

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது மத்திய அரசின் வெளி வர்த்தக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையும் நிச்சயம் அதிகரிக்கும். இந்நிலையில் நேர்முக, மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த விலை உயர்வின் சுமையை அரசால் குறைக்க முடியும்.

 ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள பிரச்சினையைத் தீர்த்துவைத்தும், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சரக்குப் போக்குவரத்தை 'இ-வே பில்' முறை மூலம் எளிமையாக்கியும் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட முடியும்.

 புதிய பட்ஜெட்டில் வருமான வரி விகிதமும், அடுக்குகளும் மாற்றப்படவில்லை. போக்குவரத்து, மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 நிரந்தரக் கழிவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகை யிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய் ரூ.50,000 வரைக்கும் வரிப் பிடித்தம் இருக்காது. வருமான வரி விதிப்பில், அதிக சலுகைகளை அளிக்காவிட்டாலும், வரவு - செலவு பற்றாக்குறை அதிகரித்துவிடக் கூடாது என்ற கவனம் வெளிப்படுகிறது. மக்களுடைய துயரங்களையும் பொருளாதாரப் பிரச்சினை களையும் தீர்ப்பதற்கு மனிதாபிமானம் உள்ள அணுகு முறையும் அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்.

நன்றி:தி இந்து தமிழ்,02.02.18.

பாடநூல் கழகத்தின் மறுபதிப்புப் புரட்சி...


பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணியிலேயே தன்னைச் சுருக்கிக்கொண்டுவிட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பல்துறை சார்ந்த நூல்களையும் பதிப்பிக்கும் தனது தொடக்கக் காலத்துப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன்படும் வகையில், அனைத்துத் துறை சார்ந்த நூல்களையும் இனிமேல் பாடநூல் கழகம் வாயிலாக எளிதாகப் பெற முடியும் என்பது வரவேற்புக்குரியது.

பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் மொழியாகத் தமிழ் ஆனதையடுத்து, தமிழக அரசு 1961-ல் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் பாட நூல்களை வெளியிட ஆரம்பித்தது. மூத்த பேராசிரியர்களைக் கொண்டு தமிழிலேயே நேரடியாகப் பாட நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன. மேலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் உலகளவில் முக்கியத்துவம் பெற்ற அறிமுக நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. இந்த மொழியாக்க முயற்சிகள், தமிழக மாணவர்களுக்குப் பேருதவியாக அமைந்தன. எம்.பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது தொடங்கிய இந்தப் பதிப்பு முயற்சிகள் அடுத்து அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சிக்காலம் வரையில் தொடர்ந்தன. ஆனால், அதன் பிறகு பாடநூல் கழகம் இந்தப் பதிப்பாக்க முயற்சிகளைக் கைவிட்டுவிட்டது. அதுவரை வெளிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டது. கல்வியாளர்கள் மத்தியில் இதுகுறித்த ஆழ்ந்த கவலை நிலவியபோதும் தமிழக அரசு போதிய அக்கறை காட்டத் தவறிவிட்டது.

இந்த நிலையில்தான், பாடநூல் கழகத்தின் செயல்பாடுகளில் தற்போது வேகம் கூடியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டமும், பாட நூல் வரைவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொது விவாதமாக மாறியிருக்கும் நிலையில், அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மறு பதிப்பு முயற்சிகள் அமைந்திருக்கின்றன. பாடநூல் கழகத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எழுதப்பட்ட நூல்கள் தேடிக் கண்டெடுக்கப்பட்டு, மறுபதிப்பு செய்யப்பட்டுவருகின்றன. தமிழ் இணைய மின்னூலகத்திலும் இந்நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. பிரதிகள் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தேடியெடுக்கும் பணியும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.

மறுபதிப்போடு நில்லாமல் புதிய பதிப்பாக்க முயற்சிகளையும் தொடங்கியிருக்கிறது பாடநூல் கழகம். சர்வதேச அளவில் இயங்கிவரும் பதிப்பாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு 40-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறார்களுக் கான புத்தகங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கான முயற்சிகளும் நடந்துவருகின்றன.

பல்துறைப் பேரறிஞர்களின் பங்களிப்போடு பெரும் பொருட்செலவு வேண்டியிருக்கும் இத்தகைய பதிப்புப் பணிகளை அரசே மேற்கொண்டு நடத்துவதுதான் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். கடந்த காலத்தில் அந்தப் பொறுப்பை, தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்கள் உணர்ந்திருந்தார்கள். பாடநூல் கழகத்தின் பதிப்பு முயற்சிகளில் தனிப்பட்ட அக்கறை செலுத்தினார்கள். கடந்த 25 ஆண்டுகளில் அந்தப் பணி தடைபட்டுப் போயிருந்தது. மீண்டும் அதைத் தொடர்வதோடு புதிய நூல் வரவுகளுக்கும் திட்டமிட்டுச் செயலாற்றிவரும் பாடநூல் கழகம் தனது பயணத்தை இதே பாதையில் தொடர வேண்டும்.

புற்றுநோய் எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது?


உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

1.புகையிலைப் பொருட்களை உட்கொள்வது,

2.மது அருந்தும் பழக்கம்,

3.அதிக உடல் எடையுடன் இருப்பது,

4.குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது,

5.உடல் உழைப்பு இல்லாமை,

மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

நீண்டகாலம் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு என்கிறது ஓர் ஆய்வு

எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?

மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு 
போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.

SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்....

தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்~ அக்டோபர் 2 முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு!


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒரு நபர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

தேசிய அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமான இது, வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவத்துக்கு தற்போது அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்கும்.   

Whatsapp ன் அடுத்த Update- Message ஐ பேசினால், அதுவாகவே Type செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...



வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை 
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சனவரி 2018 _ மாத ஊதியம் உடனடியாக வழங்கிடக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை _ காலைக்கதிர் நாளிதழில்...