புதன், 14 பிப்ரவரி, 2018

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது...



2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், 
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 96 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நேற்று நடந்தது.விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.விழாவில் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு பெறும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் இருக்கும்.

சீருடைகள் மாற்றம்:-

அரசு பள்ளிக்கூட சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வருகிற கல்வி ஆண்டில்(2018-2019) மாற்றப்படுகிறது. 

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்தில் சீருடைகளும்,

 6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மற்றொரு நிறத்திலும், 

9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வேறு ஒரு நிறத்திலும், 

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்-மாணவிகளுக்கு இன்னொரு நிற சீருடைகளும் என்று 4 வகையாகமாற்றப்பட உள்ளது. இதுபற்றி 'தினத்தந்தி' நாளிதழிலும் பள்ளிக்கூட சீருடைகள் மாறுகிறது என்று செய்தி வந்தது.

1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் வழங்கப்படுகிறது. 9-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் 20 அல்லது 30சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்கள் 51 பேருக்கு இங்கே சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த வருடம் விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என்று உயரவேண்டும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் புதிய பாடத்திட்டம் குறித்து 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான விபத்து காப்பீடு~ தமிழக அரசு…


இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. 
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தால் ரூ 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ நாமக்கல் மாவட்டம் . ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் (13/02/2018) ~ நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்ட அமைப்பின ஒன்றியச்செயலாளர்கள்கூட்டம் திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் மாவட்டத்தலைவர் திரு.க.ஆசைத்தம்பி
தலைமையில் 13.02.18அன்று நடைபெற்றது.

21.02.2018 ஆம் நாள் முதலான சென்னை_தொடர்
மறியலில் முழுமையாக பங்கேற்பது என இக்கூட்டம் முடிவாற்றியது.
          ~முருகசெல்வராசன்

திங்கள், 12 பிப்ரவரி, 2018

கபிலர்மலை ஒன்றியம்_ கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒத்திவைத்தல் சார்பு...

சென்னையில் 21 ஆம் தேதி முதல் ஜாக்டோ -ஜியோ தொடர் மறியல்... தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் பேட்டி....

NAS- 2018 (DISTRICT WISE RANK LIST)...

INCOME TAX-மாற்றுத்திறனாளியர்களுக்கான வருமானவரி 80 U தொடர்பான கருவூல செயலாளர் அவர்களின் செயல்முறைகள்...

TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசனில் நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?


மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார் செய்து கொள்கிறது. 
அதற்கு...


1. Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும். 

2. அதனைopen செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user ID யாகவும், EMIS password   பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும். 

3. இப்பொழுது student attendance என்ற ஒரு பகுதியாகவும்​ monthly report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும். 

4. Student attendance என்ற பகுதியை​ தொட்டால் வகுப்புகள் வரும். 

5. அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும். 

6. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில்​ P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும். 

7. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது absent ஆகும். 

9. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து submit கொடுத்தால்  அந்த வகுப்பு attendance online ல் ok. 

10. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது. 

11. அடுத்து monthly report தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும். 

12. EMIS பெயர் இனிஷியல் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக ஏற்றி இருக்க வேண்டும். 

13. இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது. செய்க. 

Click here for App....