ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

ஜாக்டோ - ஜியோ தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்பு...


நன்றி:தினமணி

சென்னையில் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பங்கேற்க உள்ளதாக அதன் பொதுச் செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிதம்பரத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

1.பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், 

2.இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் 50 பிரிவினர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை வழங்குதல், 

3.சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி, பணியை நிரந்தரம் செய்தல், 

4.விடுபட்ட 21 மாதங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்...
 
ஆகிய 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் நடைபெறும் தொடர் மறியலில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், போராட்டம் தொடர்பாக சென்னையில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக 
க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலர் தி.சண்முகம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ம.வரதராஜன் அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் ம.இளமதி நன்றி கூறினார்.

கர்நாடகாவில் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி~அம்மாநில முதல்வர் அறிவிப்பு...

பிறப்பு சான்றிதழ் பெற 'பிக்மி' எண் கட்டாயம்...

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-துறை அலுவலர்களுக்கான கடமைகள்...

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-அறை கண்காணிப்பாளர்களுக்கான கடமைகள்...

பிப்ரவரி 21 முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம்~ ஜாக்டோ ஜியோ வின் மனு மற்றும் போஸ்டர்…

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்...

சனி, 17 பிப்ரவரி, 2018

பள்ளிகளுக்கு மின் சப்ளை ~ ஆய்வு செய்ய அறிவுரை…


பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், இரு வாரங்களில் துவங்க உள்ளன. கோடை காலத்தில், வழக்கத்தை விட, மின் தேவை அதிகம் இருக்கும்.அதனால், 'ஓவர் லோடு' காரணமாக, மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.இதையடுத்து, பள்ளிகளுக்கு தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல இடங்களில், பள்ளிகளுக்கு மின்சாரம் செல்லும் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், தரைக்கு அடியில்உள்ள, 'கேபிள்' வெளியில் தெரிவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, பிரிவு அலுவலக பொறியாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, மின்சார வழித்தடங்களில்ஆய்வு செய்து, தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

RMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெழுச்சிகளை களைதல் தொடர்பான RMSA மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்...


அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை 
அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.

நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். 

பதிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்: 

பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர், புத்தகப் பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெறும். இதற்கான நாள், நேரத்தை இருவரும் இணைந்து முடிவு செய்வர்.
நடமாடும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து தலைமையாசிரியர் உரிய முன்னறிவிப்பு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களைக் கலந்து கொள்ள செய்வார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சியை அவரவர்தம் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான அறைகளில் வைத்தோ நடத்தலாம். இதற்கான தக்க இடவசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பள்ளிகளிலேயே தலைமையாசிரியர் செய்து கொடுப்பார்.
நடமாடும் புத்தகக் கண்காட்சிக்குப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் தேவையெனில் அவற்றைப் பதிப்பாளர்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
சாதி, மத நூல்களுக்கு இடமில்லை: புத்தகக் கண்காட்சியில் சாதி, மதம் சார்ந்த பகைமைகளைத் தூண்டும் அல்லது சட்டத்துக்குப் புறம்பாக அமையும் நூல்கள் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல்நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத்திறன்கள், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். பள்ளிகளில் நடத்தப்பெறும் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளுக்கு இருதரப்பினரும் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.

40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்:

 நடமாடும் புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலையில் குறைந்தது 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் இந்த நடமாடும் புத்தகக் கண்காட்சிகளில் பள்ளிகளுக்குத் தேவையான நூல்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு நூல்களை நன்கொடையாகவும் வழங்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 13,096 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 39.93 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றார் அமைச்சர்.

இந்த விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தியாகராயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சத்தியநாராயணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ஆர்.இளங்கோவன், பொதுநூலகத்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளியின் தலைமையாசிரியை இரா.தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.