ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018
ஜாக்டோ - ஜியோ தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்பு...
நன்றி:தினமணி
சென்னையில் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பங்கேற்க உள்ளதாக அதன் பொதுச் செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிதம்பரத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
1.பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்,
2.இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் 50 பிரிவினர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை வழங்குதல்,
3.சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி, பணியை நிரந்தரம் செய்தல்,
4.விடுபட்ட 21 மாதங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்...
ஆகிய 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் நடைபெறும் தொடர் மறியலில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், போராட்டம் தொடர்பாக சென்னையில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலர் தி.சண்முகம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ம.வரதராஜன் அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் ம.இளமதி நன்றி கூறினார்.
தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-துறை அலுவலர்களுக்கான கடமைகள்...
Click here for download ...
தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-அறை கண்காணிப்பாளர்களுக்கான கடமைகள்...
Click here for download...
தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்...
Click here for download...
சனி, 17 பிப்ரவரி, 2018
பள்ளிகளுக்கு மின் சப்ளை ~ ஆய்வு செய்ய அறிவுரை…
பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், இரு வாரங்களில் துவங்க உள்ளன. கோடை காலத்தில், வழக்கத்தை விட, மின் தேவை அதிகம் இருக்கும்.அதனால், 'ஓவர் லோடு' காரணமாக, மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.இதையடுத்து, பள்ளிகளுக்கு தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல இடங்களில், பள்ளிகளுக்கு மின்சாரம் செல்லும் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், தரைக்கு அடியில்உள்ள, 'கேபிள்' வெளியில் தெரிவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, பிரிவு அலுவலக பொறியாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, மின்சார வழித்தடங்களில்ஆய்வு செய்து, தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)