திங்கள், 12 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~கபிலர்மலை ஒன்றியத் தேர்தல்-2018~நிகழ்வுகள் (10-03-18)...

பள்ளி கோடை விடுமுறை அதிகரிக்கும் ~ கல்வித்துறை அதிகாரிகள் தகவல்...


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது.

மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது.

 மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது.

 பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன்-1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை தொடக்க பள்ளிகள் ஏப்ரல் 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில் தொடக்க பள்ளி வேலை நாட்களை 220 நாளில் இருந்து 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடு...

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

முன்பதிவு ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற முடியுமா? ரயில்வேயின் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...


நம் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட
ரயில்வே டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு மாற்ற முடியுமா?

இந்த கேள்விக்கு பலருக்கு பதில் தெரியாது. எப்படி மாற்றுவது, அல்லது அதற்கு என்ன வழிமுறை என்பதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

இதனால், பெரும்பாலானோர் டிக்கெட்டை ரத்து செய்வோம் அல்லது சில நேரங்களில் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக மாற்றிவிட்டு, எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

1. முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களில் இருக்கும் தலைமை கண்காணிப்பாளரே ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும், பெயரை மாற்ற வேண்டும், இருக்கை, படுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்.

2. ஒரு பயணி அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால், மாற்றித்தரப்படும்.

3. ஒருபயணி தனது முன்பதிவு டிக்கெட்டை தனது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்,மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால், டிக்கெட் மாற்றத் தரப்படும்.

4. ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்லும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோல் கடிதம் பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த முறையில் எந்த மாணவர்களையும் பெயரையும் மாற்றிக்கொள்ளலாம்.

5. ஒரு திருமணத்துக்காக மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பள்ளி , கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் SSA திட்ட இயக்குனர் ஆய்வு~ பதிவேடுகளை பராமரிக்க CEO உத்தரவு…


அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால்,
பள்ளி பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மார்ச் மூன்றாம் வாரத்தில், திட்ட இயக்குனர் தலைமையில் குழு பார்வை நடக்கவுள்ளது.
இதனால், அனைத்து பள்ளிகளிலும், எட்டு வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தர முன்னேற்ற நிலை ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து, ஆய்வுக்கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்...

09.03.2018 ன்படி பள்ளிவருகை பதிவேட்டின்படி மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS- இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம் பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்...