உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது.அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும் வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது.இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.
திங்கள், 19 மார்ச், 2018
புதிய அப்டேட்களுடன் Whatsapp...
உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்~ மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை…
உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ -மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடல் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது:
மனதை ஒருமுகப்படுத்துவதென்பது கற்றலினால் வருவதல்ல. இறந்தகாலம் என்பது ஒரு சுமை; எதிர்காலம் என்பது கனவு; நிகழ்காலத்தில் தற்சிந்தனையுடன் வாழ்வதே மனதே ஒருங்கிணைக்க வழிவகுக்கும்.
உங்களிடமே போட்டி போடுங்கள்: மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களுடன் போட்டி போடுவதைவிட உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்யும் போதுதான், தன்னம்பிக்கை வளர்ந்து சிறந்த சாதனையாளராக உருவாக முடியும்.
மாணவ -மாணவிகள் நேரமே இல்லை என்று ஒருபோதும் கூறக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒருவர் தமக்கு நேரமே இல்லை என்று கூறுவாராயின், அவர் அவருடைய நேரத்தையும் வேலைகளையும் சரிவர திட்டமிடாதவராக கருதப்படுவார் என்று ஆளுநர் பேசினார்.
பாட புத்தகம் தயாரிப்பு~ 28க்குள் முடிக்க கெடு…
புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.
இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இறுதி கட்டமாக, பிழை திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை~ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…
பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு~தொடக்கக்கல்வி இயக்குனர்...
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.
எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு, 18 மார்ச், 2018
சனி, 17 மார்ச், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)