திங்கள், 19 மார்ச், 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை~ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…


பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று  தெரிவித்தார்.

அரசுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் செயற்கைகோள் உதவியுடன் பாடம்~இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி…

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு~தொடக்கக்கல்வி இயக்குனர்...


புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.

 ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 17 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~கபிலர்மலை ஒன்றியத் தேர்தல்(10-03-18)~ நிகழ்வுகள்(காணொளி) ...

முதுநிலை மருத்துவ சேர்க்கை~இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் தொடக்கம்...

கல்வி, வேலைவாய்ப்பு குறித்து புள்ளியல் துறை சார்பில் கணக்கெடுப்பு...

தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்...