ஞாயிறு, 25 மார்ச், 2018
தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி...
பல்கலை, கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில், விருப்பப்பாட
தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்'
என, பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.
பல்கலை, கல்லுாரிகளில், துறைகளுக்குள்ளும், பிற துறைகளிலும், விருப்பப் பாடங்களை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்கு, பாடங்களின் தரம், முக்கியத்துவம் அடிப்படையில், மதிப்பெண் பட்டியலில் புள்ளிகள் சேர்க்கப்படும்.
இந்நிலையில், விருப்பப்பாடத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், களப்பணி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இரு புள்ளிகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கோடை விடுமுறை முதல், இதை செயல்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறையில், கிராமம் மற்றும் குடிசைப் பகுதிகளில், துாய்மைப் பணியிலும், களப்பணியிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இதற்கான பணிகளை, கல்லுாரி, பல்கலை நிர்வாகங்கள் மேற்கொள்ளவும், மாணவர்களுக்கு தகவல்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது~ ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு…
மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
* ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களை குறைக்கும். மேலும் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீடு (ஸ்டென்சில் மார்க்கிங்) அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.
* கண் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்தைகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும்.
*வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்க வேண்டும்.
* கரும்பலகை ஒளியை பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரமமூட்டுவதாகவும் இருக்க கூடாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்~ ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு…
மே-8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடைவிதித்தது. தமிழக தலைமை செயலாளர் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அறிவுறுத்தியது. ஆனால் அரசு அதை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் பேரணியாக சென்றனர்.
பேரணியில் ,
புதிய பென்சன் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனே களைய வேண்டும்,
தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
சனி, 24 மார்ச், 2018
வெள்ளி, 23 மார்ச், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)