ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

SSA AND RMSA MERGER~PDF

கூட்டுறவு தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும்....?


*SC/ST பிரிவில்  4 அணிகள் நின்றாலும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்களில் 2 வேட்பாளர்களுக்கு மட்டும்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். 

*பெண்கள் பிரிவில் 
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் ( 4×3) 
12  வேட்பாளர்கள். 
நீங்கள் ஏதேனும் 3 பெண்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். 
உங்களுக்கு யாரேனும் மிகவும் பிடித்தவர்கள் என்று மனதில் கொண்டு 4  பெண்களுக்கு வாக்களிக்க கூடாது. அப்படி வாக்களித்தால் அந்த 4 ஓட்டுகளுமே செல்லாதவையாக போய்விடும். 
எனவே 3 பெண்களுக்கு  மட்டுமே வாக்களிக்க வேண்டும். 

பொதுப்பிரிவில் 
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் (4×6) 
24  வேட்பாளர்கள் என்று வைத்துக் கொண்டால் 
நீங்கள் 6 பொது பிரிவு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். 
மீறி 6 க்கு மேல் வாக்களித்தால் அவை எல்லாமே செல்லாதவையாக போய்விடும். 

*எனவே SC/ST பிரிவுக்கு 2 ஓட்டுகள்...

*பெண் பிரிவுக்கு 3 ஓட்டுகள்...

*பொதுப்பிரிவுக்கு 6 ஓட்டுகள்...

இந்த அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்...

பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு...


நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் இணையலாம்...

நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலி தரவிறக்கம் செய்து இணையலாம்...

You are invited to Microsoft Kaizala group~click here...

சனி, 31 மார்ச், 2018

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு...


மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலைமைப்பு முன்னுரை...

ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்குப் பாஸ்போர்ட் தடை...

ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் மத்திய அரசு அறிவிப்பு...

வெள்ளி, 30 மார்ச், 2018

5 Days ICT Training From 02.04.2018 - 06.04.2018 - Proceedings...

தொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசு - 1200000/- நிதி ஒதுக்கி பள்ளிகளை தேர்தெடுக்க உத்தரவு - இயக்குநரின் செயல்முறைகள்...

அங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் ~ பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு…


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், அங்கீகார விபரங்களை, பெயர் பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னைகள், விதிமீறல்களை சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

 இதன் ஒரு கட்டமாக, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், கடிவாளம் போடப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யில் பாடத்திட்ட இணைப்பு அந்தஸ்தை மட்டும் பெற்றால் போதாது; தமிழக அரசின் விதிகளின் படி,பள்ளிக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற வேண்டும்.பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் இல்லாவிட்டால், அந்த பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியது.அதேபோல், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும். 25 சதவீத இடங்களில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை : இந்நிலையில், மற்றொரு அதிரடியாக, அனைத்து பள்ளிகளும், தங்களின் அங்கீகார விபரங்களை, பள்ளி பெயர் பலகை மற்றும் நோட்டீஸ் பலகையில் நிரந்தரமாக எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக,பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., பள்ளிகள் போன்ற அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

அறிவிப்பு பலகை : இந்த பள்ளிகள், தாங்கள் சார்ந்த பாடத்திட்டம், அதற்கான இணைப்பு எண், தமிழக அரசிடம் பெற்றுள்ள அங்கீகார எண், அதற்கான ஆண்டு உள்ளிட்ட விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.