வெள்ளி, 6 ஏப்ரல், 2018

கல்வித்துறையில் உருவானது SSAS திட்டம்... [SSA+RMSA+DIET= SSAS] (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா)

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, SSAS (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை SSA, 9-10ம் வகுப்பில் RMSA திட்டம் செயல்படுகின்றன.
இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. 

இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 

முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.

Grade D மாணவர்களுக்கு " 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம்"- Proceeding...

எட்டாம் வகுப்பிற்கு மட்டும் திருத்திய மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை...

வியாழன், 5 ஏப்ரல், 2018

தனியார் பள்ளிகளில் வேலைதேடும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான "FIND TEACHER POST" ன் ANDROID MOBILE க்கான APP வெளியீடு...

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடதிட்டப் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வுசார்பான அறிவுரைகள்~நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்...


தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
     
நாள்:-                                                        08:04:18-ஞாயிறு.      இடம்:-                                   
              திருவாரூர்.
              
மன்ற மறவரே!
      மறத்தியரே!

தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் தவறாமல் குரல் கொடுக்கும் இயக்கம்  ஆசிரியர் மன்றம்.                                                                        தமிழினத்தின்  நலனில் நமக்கிருக்கும்  அக்கறையின் வெளிப்பாடாய்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய அரசை வலியுறுத்தி, திருவாரூர் நகரில் 08.04.18, ஞாயிற்றுக்கிழமை; காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை,              ஆசிரியர் இனக்காவலர் பாவலர் தலைமையில்        தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.                                       
பெருந்திரளாக ஆசிரியர்களை பங்கேற்கச் செய்வோம்...
  
08-04-18 அன்று புறப்படுவோம், திருவாரூர் நகரை நோக்கி...

அனைவரும் வருக...
ஆதரவு தருக...

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

புதன், 4 ஏப்ரல், 2018

EMIS - புகைப்பட பதிவேற்றம் (Photo updation ),அடையாள அட்டை (ID Cardapproval)-மூன்றாம் பாலினைத்தவர் விவரங்கள் சரிபார்த்தல்~சார்பு…

பார்வை/செவித்திறன் குறைபாடு உள்ள பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சியிலிருந்து விலக்கு~ அரசாணை வெளியீடு…

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி?


கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...

* வெயில் காலத்தில், அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு,தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம்.

* பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் காலை, 10:00 மணிமுதல், 3:00 மணி வரை, வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* தாகம் இல்லை என்றாலும் தினமும் 2.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

* அதிகளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பனைநுங்கு, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிக உள்ள வெள்ளரிக்காய்,தர்பூசணி போன்ற பழச்சாறும் சாப்பிடலாம்.

* வெளியே செல்லும் போது, குடிநீர் மற்றும் குடை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேற, மிருதுவான தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி, துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

* ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதால், படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்படும். அப்போது, ஸ்டீராய்டு கலந்த களிம்புகளை தடவக்கூடாது; சுய வைத்தியமும் செய்யக்கூடாது. தோல்டாக்டர்கரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

* சூரிய ஒளி நேரடியாக படும், ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றை திரைச்சீலைகளால் மூடி வைக்கவும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வரும் வகையில், ஜன்னல்களை திறந்து வைக்கலாம். காலை, மாலை இருவேளையும்குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது.

* வெயிலால் களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து, வெப்பம் குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும். தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசல் பருக வேண்டும்.

* மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்.

* மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால், உடனடியாகடாக்டரை அணுக வேண்டும்.