புதன், 11 ஏப்ரல், 2018

DEPARTMENT EXAM ~ MAY 2018 NEWS...


SG, BT, PG TEACHERS - துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.

விளம்பர எண்: 492
விளம்பர நாள்: 01.03.2018
விண்ணப்பிக்க கடைசி நாள் :16.04.2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

இடைநிலை ஆசிரியர்கள்:

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்:

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual
TEACHERS

தொடக்கக்கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி இடத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும் நிரப்பப்படக்கூடாது-துறைக்கு சரண் வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்...

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

01.08.2017- படி உபரி ஆசிரியர்களில் STATION JUNIOR பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு - CEO செயல்முறைகள்...

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி~ கூட்டுறவு சங்கத் தேர்தல் தற்காலிக நிறுத்தம் ~தேர்தல் ஆணையர் அறிவிப்பு...

கையடக்க கணினியில் தேர்வு எழுதி ஆச்சரியப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்...


அரசு பள்ளி மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் முன்னோடி திட்டம் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி (டேப்) மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில்  1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும்  மாணவ மாணவிகள்  கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் ''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ.ஆர்  குறியீடு மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர். இன்று துவங்கிய தமிழ் தேர்வு உள்ளிட்ட  அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளனர்'' என்றார்.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு எடுத்து வரும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

திங்கள், 9 ஏப்ரல், 2018

சூரியனை அருகில் சென்று ஆராய பார்க்கெர் விண்கலம் ஜூலை 31ல் பாய்கிறது...

பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி~ ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி…


பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக் செயலி குறித்த தகவல்கள் புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.

வண்ண படங்கள்:

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய பாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது: 

ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.

IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பயணிகளுக்கு ரூ 10,000 பரிசு...

புதிய பாடத் திட்ட புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும்...


புதிய பாடத் திட்டப்படி தயாரிக்கப்படும் புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். 

இதுகுறித்துதூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் 29 போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட 9 மையங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி வாரிய பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ) விஞ்சும் வகையில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.மே மாத இறுதியில் இதற்கான புத்தகம் வெளியிடப்படும். அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். 

புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி அளிக்கப்படும். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ISRO - ISCOPE SUMMER COURSE-2018 REGISTRATION FOR SUMMER COURSE...

என் அருமை ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் பாலமோகன் ராமசாமியின் வணக்கங்கள்...

வரும் 15-04-2018 முதல் துவங்கி 14-05-2018 வரை 30 நாட்களுக்கு ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி ISRO -ISCOPE Program சார்பில் ஆன்லைன் கோடை கால படிப்பு தமிழ் வழியில் நடைபெற உள்ளது.

இது முற்றிலும் ஒரு .புதுமையான, முயற்சி கட்செவி, முகநூல், மின் அஞ்சல் மூலம் மட்டுமே இந்த பயிற்சி நடைபெறும்.

ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு முன்பு ISCOPE ஒரு ஆண்டு அறிவியல் தொடர்பாற்றல் மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதழ் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பை முழுவதும் கட்டணம் ஏதும் செலுத்தாமல் படிக்கலாம்.

படிப்பை சிறப்பாக முடிப்போருக்கு Material , சான்றிதழ் வழங்கப்படும். மற்றோர்களும் கட்டணமில்லாமல் படிக்கலாம் அவர்களுக்கு Material, சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

Syllabus for summer course .

1.கோடை கால பயிற்சி என்பதன் வரலாறு என்ன?நோக்கம்பயன்பாடுயார் யாருக்கு அடுத்த தலைமுறைக்கான தேவையின் முக்கியத்துவம்

2.வாழ்க்கைத் திறன் மற்றும் திறன் தூண்டல்கள் என்பது என்ன?

3. வாழ்க்கைத் திறன்களின் அடிப்படைத் தேவைகள்

4. கற்றல் , திறன் மேம்பாடு

5. சுய திறன் என்பது என்ன? அதை கண்டறியும் உளவியல் முறைகள்

6. தேவை கோட்பாடுNeed - Demand - Supply

7. வாழ்க்கைக்கான தேடல், அறிவுத் தேடல், நிதர்சனம் , உண்மை தேடல்

8. திறனை மேம்படுத்தும் யுக்திகள்

9. மனித ஆற்றல் - உண்மை - பயன்பாடு- விரயம் - காலக்கோடுHuman potential - Performance _truth_Timeline

10. எது உண்மை Reality

இந்த படிப்பில் சேர விரும்புவோர் தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்.06-04-2018 அன்று முதல் 13-04-2018 வரை Google form பூர்த்தி செய்து online ல் அனுப்பி வையுங்கள்.

IMPORTANT DATES:

REGISTRATION STARTS FROM 06-04-2018 AND CLOSES ON 13-04-2018

SELECTED PARTICIPANTS LIST WILL PUBLISH ON 14-04-2018

COURSE STARTS ON : 15-04-2018

First Come First Serve

முதலில் form பதிவு செய்யும் 100 ஆசிரியர்கள் மற்றும் 100 மாணவர்களுக்கு மட்டும் இந்த படிப்பு முழுவதும் கட்டணம் ஏதும் பெறாமல் நடத்தப்படும்.

கற்றலானது interactive participation , Group Discussion, Play way , Activity based, Case Study, ....... முறைகளில் நடைபெறும். ஒரு புதுமையான சான்றிதழ் படிப்புக்கு விருப்பமானோரை வரவேற்கிறோம்.


GOOGLE FORM LINK AND ONLINE REGISTRATION LINK https://goo.gl/forms/RNbwXDOWvzpV09ow1