Click here for Hall Ticket download ... https://www.coe.annamalaiuniversity.ac.in/dde_hallticket.php
சனி, 12 மே, 2018
32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை , 20 பள்ளிகளில் பயிற்சி நிலையங்களாக மாற்றம்...
32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி
12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை
அரசாணை வெளியீடு.
20 பள்ளிகளில் பயிற்சி நிலையங்களாக
மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி,
தமிழக அரசு நடவடிக்கை.
மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000லிருந்து, 1050 ஆக குறைப்பு.
வெள்ளி, 11 மே, 2018
இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் வகுப்பறைகளில் அறிமுகம்...
டேப்லெட்', கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக 'இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம்.
அடுத்த தலைமுறை 'ஸ்மார்ட்' தலைமுறையாக உருவாக தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி விட்டது. பாட முறைகளிலும், பாட விவரங்களை அறிந்து கொள்வதிலும் இந்த தலைமுறைக்கு பரிச்சியமான பல பாடப்புத்தகத்திலும் வந்துவிட்டது.
தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.
பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் 'டேப்லெட்', கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக 'இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.
பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம் – பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.
'அனிமேஷன் விலங்குகள் வழிகாட்டுதல்,சாலையின் தத்ரூபக் காட்சிகள்!’ - கூகுள் மேப்ஸின் அசத்தல் அப்டேட்
அருகில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இடங்களை எளிதில் அறிந்துகொள்ளும் விதமாக கூகுள் மேப்ஸ் தற்போது முற்றிலும் புதிய அம்சங்களுடன் விரைவில் வெளிவரவிருக்கிறது.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O 2018 டெவலப்பர்ஸ் நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி வரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா மேடையில் விளக்கினார். இந்தக் கோடை முடிந்தவுடன் அனைத்து ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களிலும் இந்தச் சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அப்டேட்டில் உள்ள அம்சங்கள் இதுவரை கூகுள் மேப்பில் இல்லாதவையாக இருக்கும். இதற்காக கூகுள் மேப்ஸின் எக்ஸ்ப்ளோர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் இலக்கை அடைய மிக யதார்த்தமான சாலை போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட விலங்குகளே இனி நமக்கு வழிகாட்டும். இதனால் இந்தச் செயலையைப் பயன்படுத்துவதற்கு ஆர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இனி கூகுள் மேப்ஸை பயன்படுத்தி நீங்கள் ஓர் இடத்தைத் தேடும் போது அதற்கு அருகில் உள்ள சிறந்த உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தானாகவே உங்களுக்குக் காட்டும். நீங்கள் உணவுப் பிரியர் என்றால் டேஸ்ட்மேக்கர்கள் அதிகம் செல்லும் பகுதிகளை உங்களுக்குக் காண்பிக்கும். கூகுள் அல்காரிதம் மற்றும் உள்ளூர் மக்கள் தரும் நம்பத்தகுந்த தகவல்களைக் கொண்டு புதிய உணவகங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும், இதில் புதிதாக வழங்கப்பட்டுள்ள யுவர் மேட்ச் (Your Match) வசதியில் நீங்கள் ஒரு உணவகத்துக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தால் அங்கு எந்த மாதிரியான உணவுகள் தயாரிக்கப்படுகிறது, அங்கு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் மற்றும் அதற்கான காரணங்களுடன் காண்பிக்கும்.
ஃபார் யூ (For You) என்ற வசதியில், உங்கள் பகுதிக்கு அருகில் நடக்கும் புதிய தகவல்கள், நிகழ்ச்சிகளை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இதைக்கொண்டு உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் மிகவும் தலை சிறந்த இடங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
வருந்துகிறோம்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் திரு.சுப்ரமணியன் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்…
வருந்துகிறோம்
-----------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் திரு.சுப்ரமணியன் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்.
மறைந்த அன்னார் பணிநிறைவு தலைமையாசிரியர் ஆவார்.நாமக்கல் அருகில் உள்ள தாதம்பட்டியை பூர்விகமாகக்கொண்டவர்.பணிநிறைவுக்குப் பின் மோகனூரை வாழ்விடமாகக்கொண்டவர்.
திரு.சுப்ரமணியனின் அஞ்சலி மோகனூர்,கலைவாணி நகரில் 11.05.18முற்பகல் 11.30மணியளவில் நடைபெறுகிறது.
அன்னாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது;
வருத்தமளிக்கிறது.
அன்னாரின் மறைவிற்கு
மாநில அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்தெரிவித்துக்கொள்கிறது.
~பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)