திங்கள், 21 மே, 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல்...


பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.

 பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. 
இதையடுத்து, மே 21ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவியர் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகள், தேர்வு மையங்களில் இன்று மதியம் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண்  ஆகியவற்றை பதிவு செய்து தாங்களே தங்களின் தற்காலிக மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு லஞ்சம்~ தமிழ்நாடு முதலிடம்,2-வது தெலங்கானா~ ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்…

அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க 87% பேர் ஒப்புதல்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்...

ஜூன் 11 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம்~ ஜாக்டோ- ஜியோ உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு…

ஞாயிறு, 20 மே, 2018

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்...


பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200  மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன்  முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும்.

ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200  மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி  ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

அத்துடன் பிளஸ்2க்கு  மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று  தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த -அமைச்சர் உத்தரவு...


புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. 

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய  பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.  அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான முகநூல் சார்ந்த பயிற்சி (Connecting Teachers Through FacebookMeting) ~CEO செயல்முறைகள்...

முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை...

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY ~Admission Notification (DDE) B.Ed Programme 2018-19…


Cost of Application- Rs.650

Last date for submission of filled in application is 14.06.2018.


Click here for more details...