திங்கள், 4 ஜூன், 2018

தொடக்கக்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் நடக்கிறது~ அட்டவணை வெளியீடு…

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance ...

 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தப்படுகிறது.

முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர்களுக்கு இம்முறையிலான வருகைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.

ஆசிரியர்கள் வருகைப் பதிவை காலை, மாலை என இரு வேளையும் biometric முறையில் விரல் ரேகைப் பதிவிட வேண்டும்.

இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அனைவரின் வருகைப்பதிவும் கண்காணிக்கப் படும்.

Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும்.

அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசியமில்லை.

மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்துமே மாற்றி அமைக்கப்படும்.

CTET NOTIFICATION -2018...

DSE PROCEEDINGS~ 2018-2019 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்து பயண அட்டை பெற்று வழங்க பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தெரிவித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல்மாவட்டம்(கிளை)~ ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட அழைப்பிதழ்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல்மாவட்டம்(கிளை)

********************************
ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட அழைப்பிதழ்...
********************************

இடம்:
நகராட்சி நடுநிலைப்பள்ளி பாரதிதாசன்சாலை,
இராசீபுரம்.
நாள்:06.06.2018(புதன்).

நேரம்:
பிற்பகல் 05.15மணி.

தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.

பொருள்:

1)ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நடவடிக்கைகள்.

2)பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல்கள்.

3)மாவட்ட ஆசிரியர் கோரிக்கைகள்.

4)மாவட்டச்செயலாளர் கொணர்வன.

ஒன்றியச்செயலாளர்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                    நன்றி.
          ~முருகசெல்வராசன்,
          மாவட்டச்செயலாளர்.

ஞாயிறு, 3 ஜூன், 2018

சனி, 2 ஜூன், 2018

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை...

பள்ளிக்கல்வி -நிர்வாக சீரமைப்பு -புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது-அனைத்து வகைப் பள்ளிகளும் CEO ஆளுகையின் கீழ் கொணரப்பட்டது-திருச்செங்கோடு,நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டது-பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் சார்பான நாமக்கல் CEO அவர்களின் செயல்முறைகள் ...

பள்ளிக்கல்வித்துறை- சுற்றுச்சூழல் கட்டுப்பாடு- உலக சுற்றுச்சூழல் தினம் ஜீன் 5ல் கொண்டாடுதல்-சார்ந்து...