வியாழன், 14 ஜூன், 2018

மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது ~ துணைவேந்தர் அறிவிப்பு...


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

 மேலும் மனோன்மனியம் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 13 ஜூன், 2018

புதிய கற்பித்தல் முறையின் படிநிலைகள்(NewPedagogy)..

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மாதம் ₹10,OOO பென்ஷன்~மத்திய அரசு புதிய பரிந்துரை…

இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள்...


அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 1962ல் உருவாக்கப்பட்டது.
 ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தின் பகுதியாக இருந்த இத்துறை, நிதித்துறையின் கீழ் தனி இயக்குனரகமாக, அனைத்து மாவட்டம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

 கருவூலத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 இதனால் அரசு துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அந்தந்தந்த அலுவலக ஊழியர்களின் சம்பளப் பட்டியலை மாவட்ட கருவூலத்திற்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.

 இதில் ஊழியர்களின் வருகை பதிவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு காகிதப்பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த பட்டியலை மாவட்ட கருவூல அதிகாரிகள் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில், மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மை திட்டம் மூலம் கருவூலம் கணக்குத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 இதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.
 எனவே அரசு துறைகளில் அந்தந்த பிரிவுகளில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் காகித சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.
 இதற்கான பயிற்சி மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. இதன் பின்னர் வரும் அக்டோபர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது.
 மேலும் அரசுத்துறை ஊழியர்களின் பணி வரலாறு முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள்...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2018-19 ஆம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் -Tab க்களில் Customize செய்யப்பட்டுள்ள APPக்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி - சார்பு...

செவ்வாய், 12 ஜூன், 2018

10th,11th,12th - Public Exam 2018 - 19 Timetable Published...


2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள்...

✍10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 தொடங்கி 29 வரை நடைபெறும்...

✍11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 தொடங்கி 22 வரை நடைபெறும்...

✍ 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை நடைபெறும்...

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி - 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை -உபரி ஆசிரியர்களைப பணிநிரவல் மூலம் மாறுதல் செய்தல் அறிவுரை வழங்குதல் சார்பு...

விடுப்பு விதிகள்...

புதிய பாடத்திட்டம் (வகுப்புகள் - 1,6,9,11) - பயிற்சி மற்றும் மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை பயிற்சி & பங்கேற்கும் கருத்தாளர்கள் பட்டியல் வெளியீடு...