வெள்ளி, 15 ஜூன், 2018

Direct Recruitment of Special Teachers~ Result published…

EMIS~Entry tips...

வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்...


'வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தற்போது வேலூா மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்27 சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள்மூலமாக 190 மையங்களும், மகளிர் திட்டம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.சில நாட்களாக இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவு செய்திட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனா.

இதனால், சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது அரசு கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு இ-சேவைஇணையதளத்தில் ஓபன் போர்டல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போர்டல் மூலம் பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே கணினி, மடிக்கணினி மூலம் பதிவு செய்திடலாம். இந்த பதிவுக்கு சான்றிதழுக்கு ரூ.67 பதிவுக் கட்டணமாக இணையவங்கி மூலம் பணப்பரிவாத்தனை செய்திட வேண்டும்.

Public Holiday for Id-ul-Fitr (Ramzan) declared on 16.06.2018 under Negotiable Instruments Act, 1881 - Orders - Issued...

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA & CCA வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கபிலர்மலை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி.ஆசிரியர் மன்றம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொடர் நடவடிக்கைகள் கடிதம்...

வியாழன், 14 ஜூன், 2018

பரமத்தி ஒன்றிய ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA & CCA வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரமத்தி ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில்அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொடர் நடவடிக்கைகள் கடிதம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த கபிலர்மலை ,பரமத்தி மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர்கள் தங்களது ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் களுக்கும் ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய HRA மற்றும் CCA- Grade 1(b) வேண்டிய கோரிக்கை மனுவிற்கு நாமக்கல்மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கைகளை தெரிவித்தல்...

பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு~ டாக்டர் வி.எஸ். நடராஜன் வலியுறுத்தல்...


பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பகுதிகள் இடம்பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.எஸ். நடராஜன் வலியுறுத்தினார்.

உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் டாக்டர் வி.எஸ். நடராஜன் பேசியது:

இன்றைய காலக்கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பலர் தங்களது குடும்பத்தினரால் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதிலும், குறிப்பாக நோய்வாய்ப்பட்ட முதியோருக்குத் தேவையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் அவர்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

பல வீடுகளில் வயது முதிர்ந்த பெற்றோரின் சொத்துகளை யும், ஓய்வூதியத்தையும் அனுபவிக்கும் பிள்ளைகள் அவர்களைச் சரிவர கவனிப்பதில்லை. முதியோருக்கு இறுதிக் காலத்தில் அன்பும், அரவணைப்பும் மட்டுமே தேவைப்படுகிறது. இதை நினைவில் கொண்டு பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும்.

முதியோர் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு குழந்தையும் அறிந்து கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதைக் கருத்தில் கொண்டு 5 -ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பகுதிகளை இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் நடராஜன்.

இதைத் தொடர்ந்து, முதியோர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள முதியோரை மதிப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. முதியோர்கள் எந்தெந்த வகையில் அவமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சமூக நலத் துறை இயக்குநர் அமுதவல்லி, 500 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு...



வணக்கம்...
மூன்று நாட்கள் கட்டுக்கோப்புடனும், உணர்வு பூர்வமாகவும் உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்திய  ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்களை அழைத்து பேசாத முதல்வரை நேரில் சந்திப்பது என்று உயர்மட்டக்குழு முடிவெடுத்ததனடிப்படையில் (13.06.18) மாலை கோட்டை நோக்கி நாம்  பேரணியாக சென்ற போது காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் அனைவரையும் ரிமாண்ட் செய்ய சொல்லி வாதாடியும், ரிமாண்ட் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து எதிர்கட்சிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடும் ஜாக்டோஜியோ நிர்வாகிகளை அழைத்துப்பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன்  சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்தும் ஆதரவளித்தன . எனவே நமது அடுத்த கட்ட இயக்கத்தை வலுவாக எடுத்துசெல்லும் பொருட்டு மாநில அளவிலான காலவரையற்ற உண்ணாவிரத்தை இந் நிலையில் முடித்து  கொள்வது முடிவு செய்யப்பட்டது , மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களையும் இத்துடன் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஜாக்டோஜியோ உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
                          இவண்.             
                   ஜாக்டோ-ஜியோ.

மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது ~ துணைவேந்தர் அறிவிப்பு...


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

 மேலும் மனோன்மனியம் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.