வியாழன், 14 ஜூன், 2018

பரமத்தி ஒன்றிய ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA & CCA வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரமத்தி ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில்அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொடர் நடவடிக்கைகள் கடிதம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த கபிலர்மலை ,பரமத்தி மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர்கள் தங்களது ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் களுக்கும் ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய HRA மற்றும் CCA- Grade 1(b) வேண்டிய கோரிக்கை மனுவிற்கு நாமக்கல்மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கைகளை தெரிவித்தல்...

பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு~ டாக்டர் வி.எஸ். நடராஜன் வலியுறுத்தல்...


பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பகுதிகள் இடம்பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.எஸ். நடராஜன் வலியுறுத்தினார்.

உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் டாக்டர் வி.எஸ். நடராஜன் பேசியது:

இன்றைய காலக்கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பலர் தங்களது குடும்பத்தினரால் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதிலும், குறிப்பாக நோய்வாய்ப்பட்ட முதியோருக்குத் தேவையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் அவர்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

பல வீடுகளில் வயது முதிர்ந்த பெற்றோரின் சொத்துகளை யும், ஓய்வூதியத்தையும் அனுபவிக்கும் பிள்ளைகள் அவர்களைச் சரிவர கவனிப்பதில்லை. முதியோருக்கு இறுதிக் காலத்தில் அன்பும், அரவணைப்பும் மட்டுமே தேவைப்படுகிறது. இதை நினைவில் கொண்டு பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும்.

முதியோர் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு குழந்தையும் அறிந்து கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதைக் கருத்தில் கொண்டு 5 -ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பகுதிகளை இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் நடராஜன்.

இதைத் தொடர்ந்து, முதியோர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள முதியோரை மதிப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. முதியோர்கள் எந்தெந்த வகையில் அவமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சமூக நலத் துறை இயக்குநர் அமுதவல்லி, 500 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு...



வணக்கம்...
மூன்று நாட்கள் கட்டுக்கோப்புடனும், உணர்வு பூர்வமாகவும் உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்திய  ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்களை அழைத்து பேசாத முதல்வரை நேரில் சந்திப்பது என்று உயர்மட்டக்குழு முடிவெடுத்ததனடிப்படையில் (13.06.18) மாலை கோட்டை நோக்கி நாம்  பேரணியாக சென்ற போது காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் அனைவரையும் ரிமாண்ட் செய்ய சொல்லி வாதாடியும், ரிமாண்ட் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து எதிர்கட்சிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடும் ஜாக்டோஜியோ நிர்வாகிகளை அழைத்துப்பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன்  சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்தும் ஆதரவளித்தன . எனவே நமது அடுத்த கட்ட இயக்கத்தை வலுவாக எடுத்துசெல்லும் பொருட்டு மாநில அளவிலான காலவரையற்ற உண்ணாவிரத்தை இந் நிலையில் முடித்து  கொள்வது முடிவு செய்யப்பட்டது , மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களையும் இத்துடன் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஜாக்டோஜியோ உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
                          இவண்.             
                   ஜாக்டோ-ஜியோ.

மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது ~ துணைவேந்தர் அறிவிப்பு...


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

 மேலும் மனோன்மனியம் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 13 ஜூன், 2018

புதிய கற்பித்தல் முறையின் படிநிலைகள்(NewPedagogy)..

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மாதம் ₹10,OOO பென்ஷன்~மத்திய அரசு புதிய பரிந்துரை…

இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள்...


அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 1962ல் உருவாக்கப்பட்டது.
 ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தின் பகுதியாக இருந்த இத்துறை, நிதித்துறையின் கீழ் தனி இயக்குனரகமாக, அனைத்து மாவட்டம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

 கருவூலத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 இதனால் அரசு துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அந்தந்தந்த அலுவலக ஊழியர்களின் சம்பளப் பட்டியலை மாவட்ட கருவூலத்திற்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.

 இதில் ஊழியர்களின் வருகை பதிவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு காகிதப்பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த பட்டியலை மாவட்ட கருவூல அதிகாரிகள் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில், மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மை திட்டம் மூலம் கருவூலம் கணக்குத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 இதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.
 எனவே அரசு துறைகளில் அந்தந்த பிரிவுகளில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் காகித சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.
 இதற்கான பயிற்சி மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. இதன் பின்னர் வரும் அக்டோபர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது.
 மேலும் அரசுத்துறை ஊழியர்களின் பணி வரலாறு முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள்...