ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்

அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்

தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக தேர்வுத்துறை உருவானது. சென்னை, மதுரை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர் கீழ் செயல்பட்டன.இதன் மூலம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உட்பட 40 வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்கல் பணிகளில் இத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு மாவட்ட அலுவலகங்கள் துவங்கப்படுகின்றன. இதற்காக புதிதாக உதவி இயக்குனர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்.,1 முதல் 32 மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்கள் செயல்பட சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது,' என்றார்.

மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆர்.எம்.எஸ்., ரோட்டில் செயல்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகமாக செயல்படும்.

யுபிஎஸ்சி 2019 தேர்வுகளுக்கான அட்டவனை வெளியீடு...


2019 ஆம் ஆண்டு எந்தெந்த அரசுப் பணிகளுக்கு எப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகள் யுபிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எந்த மத்திய அரசு பணிகளுக்கு எந்தெந்த போட்டித் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வருடந்தோறும் வெளியிடுவது வழக்கம்.

இந்த அட்டவணையில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது அறிவிக்கப்படும், விண்ணப்பிப்பதற்கான காலக் கெடு, தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணையை யுபிஎஸ்சி இணையதளத்தில் (upsc.gov.in) தெரிந்துகொள்ளலாம்

ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வு தாள்கள்...


TNPSC: DEC-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.


விளம்பர எண்: 508

விளம்பர நாள்: 20.09.2018

விண்ணப்பிக்க கடைசி நாள் :19.10.2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

BEO/ D. I. /இடைநிலை ஆசிரியர்கள்...

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்...

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I

(or)

152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

தொடக்கநிலை வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி...

அரசு ஊழியர்களுக்கு பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை...


1. மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெற...

2.  பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர்  தங்களது பணப்பிடித்த அறிக்கையை பெற...

3. புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் தங்களது பணப்பிடித்த அறிக்கையை பெற...

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்...

சனி, 22 செப்டம்பர், 2018

சமக்ர சிக்க்ஷா-பள்ளி மான்யம்-பயன்படுத்துதல்-வழிகாட்டுதல் குறிப்புகள்


தொடக்கக் கல்வி-பள்ளிக் கல்வி -2018-2019 ஆம் ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயாத்தப்பட்டது - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளுதல்-சார்ந்து...

அரசு விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது - அறிவுரை வழங்குதல் - சார்பு...