வியாழன், 27 செப்டம்பர், 2018

ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு: அமைச்சர் செங்கோட்டையன்


ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு வாரத்தில் அதற்கான விழிப்புணர்வு பணிகள் தொடங்கப்படும்.
மேலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கான கையேடும் வழங்கப்படும். மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு செய்யப்படும். விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் எதற்கு தேவை, எதற்கு தேவையில்லை...

தமிழகம் முழுவதும் விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-ஏற்பாடுகளை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு...

அனைவருக்கும் 50 MB வேக இணைய சேவை -புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு ஒப்புதல்...

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம்~~உச்ச நீதிமன்றம்


இரண்டாம் பருவ புத்தகங்கள் தயார் ~அக்-3ல் வழங்கப்படும்

*இரண்டா பருவ பாடநூல்கள்  தயார்:
 அக்., 3ல் வினியோகம்*#

புதிய பாடத் திட்டத்தில் தயாரான,
இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. காலாண்டு தேர்வு வரை, முதல் பருவம்; அரையாண்டு தேர்வு வரை, இரண்டாம் பருவம்; ஆண்டு இறுதி தேர்வுக்கு, மூன்றாம் பருவம் என, மூன்று புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பருவ புத்தகமும், அந்தந்த பருவ தேர்வுடன் முடித்துக் கொள்ளப்படும்.

தமிழக கல்வியில் தரம் இல்லை --CBSE குற்றச்சாட்டு


பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பு இல்லை --கல்வி அமைச்சர்


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை...

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ப்படுகின்றனர். தமிழ்நாட்டின் காலிப்பணியிடங்களின் பட்டியல்...