வெள்ளி, 5 அக்டோபர், 2018

*திருச்செங்கோடு கல்வி மாவட்டம்_ மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு (04:/10/2018)*

04.10.18  (வியாழன்) அன்று மாலை 6:30 மணியளவில் திருச்செங்கோடு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, பரமத்தி மற்றும் எலச்சிபாளையம்  ஒன்றியங்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய GRADE I(B) வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டல் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
வீட்டு வாடகைப்படி நிலுவைத் தொகையும் உடனடியாக வழங்க கோரப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் இன்று 5 ஒன்றியங்களின் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வழிகாட்டல் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தார்.

8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தும் NMMS தேர்விற்கு மாணவர்கள் விவரங்களை online ல் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ...

நாமக்கல் மாவட்டம் மழை பாதிப்பு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு ~ மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்

*நாமக்கல் : மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசர கால உதவி எண் 1077 ஐ தொடர்பு கொள்ளலாம்*.

நாமக்கல் - 9445000543,
இராசிபுரம் - 9445000544,
சேந்தமங்கலம் - 9445461913, கொல்லிமலை - 9442894789, குமாரபாளையம் - 9942057420, மோகனூர் - 9788410768, திருச்செங்கோடு - 9445000545,
பரமத்தி வேலூர் - 9445000546
ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர் கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.ஆசியாமரியம் அறிவிப்பு.

பேரிடர் மேலாண்மை(இடி - மின்னல்) பற்றிய விழிப்புணர்வு ~~ தமிழகம் முழுவதும் RED Alert

மழை காலங்களில் இடி மின்னல் ஏற்படும் போது செய்யக்கூடாத செயல்கள் எவை? செய்ய கூடியவை எவை? என்று பேரிடர் மேலாண்மை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
 Click here

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா




அச்சுறுத்தலைத் தூள்தூளாக்கி ஜாக்டோ ஜியோ எழுச்சி போராட்டம்


மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்...

வியாழன், 4 அக்டோபர், 2018

நடிகர் ஜி.வி.பிரகாஷ் முயற்சியால் அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முயற்சியால் ஆங்கில வழி மழலையர் வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அதனை ஊக்கப்படுத்தும் பொருட்டு நடிகர் ஜி.வி.பிரகாஷ், சில அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, ஆங்கில வழி மழலையர் வகுப்புகளை தொடங்குவதற்கு உதவி வருகிறார்.
அதே போல, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியையும் அவர் தத்தெடுத்துள்ளார்.

 அந்தப் பள்ளியில், ஆங்கில வழி மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) தொடங்குவதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை வகித்தார்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் பங்கேற்று ஆங்கில வழி வகுப்பை தொடக்கி வைத்தார்.


அவர் பேசுகையில், பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால், இது போன்று பள்ளியை தத்தெடுத்து அங்கு ஆங்கில வழி முன் மழலையர் வகுப்பு நடத்த உதவி வருகிறேன். இங்கு வகுப்புக்கென தனியாக ஒரு ஆசிரியர் நியமித்து அவருக்கான சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல, விஜயதசமி தினத்தில் மேலும் 6 பள்ளிகளைத் தத்தெடுக்க உள்ளேன் என்றார்.


மரக்காணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயசங்கர், இளஞ்செழியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கவாஸ்கர், தலைமை ஆசிரியர் பிரேமலதா மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினர்.

Whatsapp ல் புதிய வசதி!- வீடியோ கால் பேசிக் கொண்டே மெயின் திரையில் பிரவுஸ் செய்யலாம்

வீடியோ கால் பேசிக் கொண்டே மெயின் திரையில் பிரவுஸ் செய்யும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் தனது சமீபத்திய அப்டேட்டில் வீடியோவுடன் டெக்ஸ்ட் PiP Picture in Picture என்ற மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
பிக்சர் இன் பிக்சர் வீடியோ காலிங், டெக்ஸ்ட் அப்டேட் வசதி ஆண்ட்ராய்டு 4.4 வெர்சன் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அது என்ன பிக்சர் இன் பிக்சர் வீடியோ காலிங் வசதி எனக் கேட்கிறீர்களா? அதாவது வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும்போதே திரையை சற்று சிறியதாக்கி மெசேஜ் செய்ய முடியும். பிரவுஸ் பண்ண முடியும்.
இந்த வசதியப் பெற வாட்ஸ் அப்பின் புது அப்டேட்ஸில் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற அப்டேட்டை கிளிக் செய்து பயன்பெறவும்.
வாட்ஸ் அப்பின் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் எப்படி 24 மணி நேரத்தில் மறைகிறதோ அதேபோல் இந்த டெக்ஸ்ட் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் மறைந்துவிடும்.

You Tube மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நவம்பருக்குள் 3,000 பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆசியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.