ராணுவ பொது பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொது பள்ளிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. மொத்தம் 137 பள்ளிகள், ராணுவ பயிற்சி மையங்கள் உள்ள இடங்களில் செயல்படுகிறது. தற்போது இந்த பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் போன்றபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. உத்தேசமாக 8 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. முதுநிலை படிப்பு, பட்டப்படிப்புகளுடன், ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் வி்ண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி செய்தவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள்உள்ளன. பணி அனுபவம் மிகுதியாக உள்ளவர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ் சரிபார்த்தல், அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை சோதித்த பின்பு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கற்பித்தல் திறனும் சோதிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
24-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு முறைகள் நவம்பர் 17,18-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை
http://aps-csb.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்