புதன், 10 அக்டோபர், 2018

இன்டர்நெட் வசதியுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரை நவம்பரில் கம்ப்யூட்டர்மயம் ~ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் 2டிகிரி உயர்ந்தால் கொல்கத்தாவில் வெயில் கொளுத்தும்~ஐ.நா குழு எச்சரிக்கை...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு~அரசாணை வெளியீடு…

செவ்வாய், 9 அக்டோபர், 2018

AWD - தகுதியுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி காப்பாளர் - துறைமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் தேர்ந்தோர் பட்டியல்!




SSA - 15 Days CCRT Training For Primary Teachers


இந்தியாவில் பருவநிலை மாற்றம் -- வெயில், பஞ்சம் அதிகரிக்கும் -- ஐ.நா. அறிவிப்பு


3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு ~~ ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில், 3,000 அரசு பள்ளிகளில், கேமரா வுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும், நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், 'டேப்லெட்' வாங்க, 'டெண்டர்' விடப்பட்டது.இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை துவக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 'எல்மோ' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக, ஐந்து அரசு பள்ளிகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்புஅறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள, ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம். அதேபோல, மாணவர்கள் சந்தேகம் கேட்டால், அவர்களின் முகத்தை, மற்ற மாணவர்கள் திரையில் பார்க்க முடியும்.

புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோ மாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும். வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை, பாடம் நடத்துவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அந்த மாணவர்கள் கேள்வி கேட்டால், கேமராவில் அவர்களின் முகத்தை பார்க்க முடியும்.

TNPSC Notification (08/10/2018)

ஆய்வாளர்கள் எச்சரிக்கை~ 2,300-ம் ஆண்டுக்குள் உலகில் கடல் மட்டத்தின் அளவு 50 அடி உயரும்…


கரியமில வாயு, மீத்தேன், குளோரோபோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும், உலகச் சூழியலும் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் 2,100-ம் ஆண்டுக்குள் கடலில் 8 அடியும், 2,300-ம் ஆண்டுக்குள் 50 அடியும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் இ காப் தலைமையிலான ஆய்வாளர்கள் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பு மற்றும் கடல்மட்டம் அதிகரிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அது குறித்த ஆய்வு அறிக்கையை ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளங்கள் குறித்த ஆண்டு ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

அது குறித்து பேராசிரியர் ராபர்ட் இ காப் கூறியதாவது:

''உலக அளவில் கடல் மட்டத்தின் அளவு 2,100-ம் ஆண்டுக்குள் 8 அடியும், 2,300-ம் ஆண்டுக்குள் 50 அடியும் உயரும் அபாயம் நிலவுகிறது. இதற்கு முக்கியக்காரணம் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுவது தொடர்ந்து அதிகரித்தால், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும், உலகின் சூழியலுக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கடல்மட்டத்தின் அளவு 0.2 அடி உயர்ந்துள்ளது. மிதமான அளவு பசுமை இல்லவாயுக்கள் அதிகரித்து வந்தால், 2,100-ம் ஆண்டில் கடல்மட்டத்தின் அளவு 1.4 அடி முதல் 2.8 அடியாகவும், 2,150-ம் ஆண்டுக்குள் 2.8 அடியில் இருந்து 5.4 அடியாகவும் அதிகரிக்கலாம். 2,300-ம் ஆண்டுக்குள் 14 அடி வரை அதிகரிக்கக்கூடும்.

33 அடி கடல்மட்ட உயரத்துக்கும் குறைவான பகுதியில் 760 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடல்மட்டம் உயரும்போது இவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலுக்கு உள்ளாகும். கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள், பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, சூழியல் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

2000-ம் ஆண்டில் இருந்து 2050-ம் ஆண்டுவரை உலக சராசரியில் கடல்மட்டத்தின் அளவு 6 முதல் 10 இன்ச் வரை அதிகரிக்கக் கூடும் என்று நம்புகிறோம். அதேசமயம், சில இடங்களில் 18 இன்ச் வரை உயரக்கூடும். இதற்கு மிகமுக்கியக் காரணமாக இருப்பது பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றமும், அதைக் கட்டுப்படுத்தாமல் மனிதர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதுமேயாகும்.

உலக அளவில் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருவது மனிதகுலத்துக்கு எச்சரிக்கை மணியாகும். இதற்கான காரணங்களை நாம் அறிவோம். கடல்மட்டம் உயராமல் இருப்பதற்கான வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்''.

இவ்வாறு பேராசிரியர் ராபர்ட் இ காப் தெரிவித்தார்.