புதன், 10 அக்டோபர், 2018

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு மருத்துவ காப்பீடு கிடையாது


தமிழ்நாடு அரசு உதவி மருத்துவர் பணிக்கு விண்ணபிக்கலாம்


பள்ளிக்கல்வித்துறை நாள்:26.09.2018- தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணை எண் :200 திருத்தம் செய்து அரசாணை வெளியீடு



வருமானவரி முறையாக செலுத்தினால் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு

முறையாக வருமான கணக்கு காட்டி, வரி செலுத்துவோருக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோருக்கு, பாஸ்போர்ட் வழங்குவதில் முன்னுரிமை, மாநில கவர்னருடன் அமர்ந்து, தேனீர் பருகும் கவுரவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 
கவுரவம்,நேர்மை,வரி,செலுத்தினால்,சலுகை 
வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில், வருமானவரி செலுத்துவோர் மிகவும் குறைவு. 

இந்த சதவீதத்தை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'முறையாக வருமான கணக்கு காட்டி, வரிசெலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்து வருகிறது.வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நவீன தொழில் நுட்பங்களை வருமான வரித்துறை பயன்படுத்தி வருகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளில், வரி வளையத்தில் கோடிக்கணக்கானோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; அரசின் வருவாயும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், நேர்மையாக வருமான கணக்கு காட்டி, முறையாக வரி செலுத்துவோருக்குபல்வேறு சலுகைகளை வழங்கி கவுரவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், வரி செலுத்துவது கவுரவம் என்ற மனப்பான்மையை மக்கள் மத்தியில் விதைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. 

அரசின் திட்டப்படி, முறையாக வரி செலுத்துவோருக்கு, பாஸ்போர்ட் வழங்குவதில் முன்னுரிமை, மாநில கவர்னருடன் அமர்ந்து தேனீர் பருகும் கவுரவம், விமான நிலையங்களில் சிறப்பு அறைகளில் தங்க அனுமதி உள்ளிட்டபல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தயாரிப்பதற்காக, சி.பி.டி.டி., எனப்படும் மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் கீழ், நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. 
இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் பரிசு திட்டங்கள் உள்ளன. அத்தகைய திட்டங்களை நிபுணர் குழு ஆய்வு செய்து, சிறப்பான திட்டத்தை தயாரிக்கும். பரிசு அல்லது சலுகைகளுக்கு உரியோர், அவர்கள் செலுத்தும் வரி தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட மாட்டர்கள். 
காலந்தவறாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், தில்லு முல்லு செய்து சட்ட ரீதியில் தண்டனைக்கு ஆளாகாமல் இருத்தல், சோதனைகளுக்கு ஆட்படாமல் நன்னடத்தையுடன் திகழ்தல் போன்றவை, பரிசு அல்லது சலுகைகள் பெறுவதற்கான வரையறைகளாக இருக்கும். இதற்கு முன், 2004ல், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பரிசுவழங்கி கவுரவிக்கும் திட்டத்தை, வருமான வரித்துறை அமல்படுத்தி உள்ளது; பின், அத்திட்டம் கைவிடப்பட்டது

.ற்போது, வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க வேண்டியது அவசியம். எனவே, அதற்கான திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
ஜப்பானில் எப்படி? 
நேர்மையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில், பிற நாடுகள், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. கிழக்காசிய நாடான, ஜப்பானில், நேர்மையாக வரி செலுத்தி, பிறருக்கு முன்மாதிரியாக திகழும் குடிமகன்கள், அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கலாம். தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சில், வரி செலுத்துவோரை கவுரவிக்க, அவர்களின் பெயர்களை, லாட்டரி சீட்டில் பொறிக்கும் திட்டம் அமலில் உள்ளது. கிழக்காசிய நாடான, தென் கொரியாவில், நேர்மையாளர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது; விமான நிலையங்களில், வி.ஐ.பி., அறைகளில் அவர்கள் தங்கலாம்; வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம். 
அண்டை நாடான பாகிஸ்தானில், வரி செலுத்துவோரில், 100 நேர்மையாளர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள், விமான நிலையங்களில், வி.ஐ.பி., அறைகளில் தங்கலாம்; குடியேற்றவிண்ணப்பங்கள் முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படுகிறது. இலவச பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது; விமானங்களில் கூடுதல் பெட்டிகளை எடுத்து செல்லலாம்.

DEE PROCEEDINGS-Momo challenge' இணைய விளையாட்டை கைபேசியில் விளையாடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு



நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்~ அரசு / உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் TN Schools என்ற கைப்பேசி செயலி மூலம் மாணவர்களின் வருகைப் பதிவை மேற்கொள்ளுதல்-சார்பு...

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ன் படி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2019 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...

HRA & CCA ~ முந்தைய வீட்டுவாடகைப் படி தற்போதைய 1(b) வீட்டுவாடகைப் படி ஓர் ஒப்பீடு…

🔹பள்ளிபாளையம்,திருச்செங்கோடு,எலச்சிபாளையம்,பரமத்தி, கபிலர்மலை ஆகிய 5 ஒன்றியங்களும் ஈரோடு மாநகராட்சிக்குரிய நிலை  1(b) க்கான வீட்டுவாடகைப் படி(HRA) மற்றும் நகரஈட்டுப்படி (CCA) ஆகிய இரண்டு படிகளும் வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய ஊர்களுக்கும், அப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் மேற்கண்ட படிகள் பெறத் தகுதியுடையவை.

ஈரோடு மாநகராட்சியிலிருந்து 16 கி.மீ க்குள் வரும் வருவாய் கிராமங்கள் வருகின்ற ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுமைக்கும் (ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்)வீட்டுவாடகைப் படி HRA நிலை 1(b) மட்டும் பெற தகுதியுடையவர்கள்.

🔹முந்தைய வீட்டுவாடகைப் படி தற்போதைய வீட்டுவாடகைப் படிஓர் ஒப்பீடு(ஒன்றியம் முழுமைக்கும் பலன் பெறுபவர்களின் வித்தியாசம்)

🔹 ஒன்றியம் முழுவதும் HRA 1(b) மட்டும்  பலன் பெறுபவர்களுக்கான HRA விபர பட்டியல்.

🔹Pay Range 13600 க்குள் உள்ளவர்கள் முன்பு ₹600 வீட்டுவாடகைப் படியாக அனுமதிக்கப்பட்டனர்.தற்பொழுது HRA நிலை 1(b)ன் படி  ₹ 700 பெறுவார்கள்.கூடுதலாக ₹ 100 பெறுவார்கள்.

🔹Pay Range 13601 -17200 ல்  முன்பு ₹700 HRA  பெற்றனர். தற்பொழுது ₹ 1000 பெறுவார்கள்.கூடுதலாக ₹ 300 பெறுவார்கள்.

🔹Pay Range 17201 -20600 & 20601 -21000 ல் முன்பு ₹ 800 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹1200 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 400 பெறுவார்கள்.

🔹Pay Range 21001 -23900ல்  முன்பு ₹1000 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹1400 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹400 பெறுவார்கள்.

🔹Pay Range 23901-27200 ல்  முன்பு ₹1200 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹1700 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 500 பெறுவார்கள்.

🔹Pay Range27201 -30600 ல்  முன்பு ₹1500 HRA  பெற்றவர்கள் தற்பொழுது  ₹ 2000 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 500 பெறுவார்கள்.

🔹Pay Range 30601-30800 &30801 -35400ல்  முன்பு ₹1700 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹2300 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 600 பெறுவார்கள்.

🔹Pay Range 35401 -37300 ல்  முன்பு ₹1800 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹2600 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹800 பெறுவார்கள்.

🔹Pay Range 37301-41100 ல் முன்பு ₹2300 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹3000 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹700 பெறுவார்கள்.

🔹Pay Range 41101 -44500 ல்  முன்பு ₹2600 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹3300 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹700 பெறுவார்கள்.

🔹Pay Range 44501 -50200 ல்  முன்பு ₹2900 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹3600 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹700 பெறுவார்கள்.

🔹Pay Range 50201-51600ல் முன்பு ₹3100 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹ 3800 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 700 பெறுவார்கள்.

🔹Pay Range 51601 - 54000 ல் முன்பு ₹3200 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹4100 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 900 பெறுவார்கள்.

🔹Pay Range  54001 -55500 ல் முன்பு ₹3200 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹4300 பெறுவார்கள். இவர்கள் கூடுதலாக ₹1100 பெறுவார்கள்.

🔹Pay Range 55501 க்கு மேல் உள்ளவர்களில் முன்பு ₹3200 HRA  பெற்றவர்கள் தற்பொழுது ₹4300 பெறுவார்கள். இவர்கள் கூடுதலாக ₹1100 பெறுவார்கள்.

        ~ஆசிரியர் மன்றம் ,              நாமக்கல் மாவட்டம்


தற்செயல் விடுப்பு போராட்ட நாளுக்கு சம்பளம் பிடித்தம் செய்தால் வழக்கு~ஆசிரியர் சங்கங்கள் முடிவு…

சிபிஎஸ்இ தேர்வு நடைமுறைகளில் மாற்றம் ~மத்திய அரசு திட்டம்…