வியாழன், 11 அக்டோபர், 2018

இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இணையதள, 'புளூவேல்' விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.


'மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது. 'இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Periyar University B.Ed (Part time)Admission 2018-2020...

நாமக்கல் கல்வி மாவட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பொது மக்கள் திட்ட முகாம் (Sabki yojana sabha vikas) -கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் (VPDP}-02.10.2018 முதல் 15.12.2018 வரை நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்-சார்பு...

SSA-Information of the G.O NO: 200 dated:26-9-18 to districts about the correction made in G.O NO:211 for ABL and G.O NO:207 for SALM-reg...

திருத்தம் செய்யப்பட்ட அரசாணை 200 - SPD முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம்..


கிராம வளர்ச்சி திட்டம் - கிராமசபை கலந்து கொள்ளுதல் சார்ந்து நாமக்கல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்



நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா தொடங்கியது...