சனி, 20 அக்டோபர், 2018
புதிய அப்டேட்டில் கலக்க வரும் வாட்ஸ் ஆப்.! சிறப்பு அம்சங்கள்.!
வெள்ளி, 19 அக்டோபர், 2018
முப்பருவக்கல்வியில் மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
🥁🥁🥁🥁🥁🥁🎤
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் பொதுவாக 5 வருடங்களுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுகின்றன. அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவால் பாடத்திட்டம் முடிவு செய்யப்படுகிறது.
பல்வேறு துறை வல்லுநர்களும் பல்வேறு வகுப்பிற்கான பாடத்திட்டத்தினை வரைவு செய்கின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தந்தப் பாடங்களுக்குரிய நூல்களை எழுதுகின்றனர்.
இந்நிலையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, சட்டப்பேரவையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
மேலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2012-2013ம் வருட கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2013-2014ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9 ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்டது. இந்த முறையின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் எழுதும் பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் 1,6,9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதியப் பாடப்புத்தகம் எழுதும் பணிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது,
'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில் , தற்பொழுது 9ம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10 வகுப்பில் உள்ளது போல் ஒரே புத்தகமாக வழங்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் 8ம் வகுப்பு வரையில் தொடர் மதிப்பீட்டு முறையில் பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பருவத்திற்குரிய தேர்வு பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய பின்னர், 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்து தேர்வு எழுதுவதால் சிரமப்படுகின்றனர். எனவே 9ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை மாற்றலாம் என கூறியுள்ளனர்.
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து பொதுக்கல்வி வாரியத்தின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.
மேலும், தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்து போது அறிமுகப்படுத்தப்பட்ட 9 ம் வகுப்பு முப்பருவமுறை திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக்கால முன்னெச்சரிக்களை நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தல்
⛱⛱⛱ பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைக் கால முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மழைக் காலம் என்பதால் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கக்கூடிய பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் தொட்டி, கழிவுநீர் மற்றும் கிணறுகள் திறந்தநிலையில் இல்லாமல் மூடி வைக்கவேண்டும்.
காலை வணக்கக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் குறித்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்தவேண்டும்.
மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
12 செயல்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது
புதிய பாடத்திட்டத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரம் ஒதுக்கி வரைவு திட்டம் வெளியீடு...
மழலையருக்கான, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் துாங்குவதற்கு, இரண்டுமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய, கே.ஜி., வகுப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்துள்ள, பாட திட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வி துறையும், புதிய பாடத்திட்டம் தயாரித்து உள்ளது.இதற்கான வரைவு பாட திட்டத்தை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ளது.இந்த பாடத்திட்டத்தில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு, என்னென்ன பாடங்கள் கற்று தர வேண்டும்.மாணவ, மாணவியருக்கு, வகுப்பில் எடுக்க வேண்டிய பாடங்கள் என்ன என்ற, விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், கே.ஜி., குழந்தைகளுக்கு, வகுப்புகள் நடக்கும் நேரம்குறித்தும், பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலின்படி, காலை, 9:30 மணிக்கு வகுப்புகள் துவங்கும்; பகல், 12:30 மணிக்கு, மதிய உணவு நேரம் ஒதுக்கப்படும்.அதன்படி பகல், 1:00 மணி முதல், 3:00 மணி வரை, ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., குழந்தைகளுக்கு, துாங்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
அதாவது பள்ளியிலேயே, இரண்டு மணி நேரம், குழந்தைகளை துாங்க வைத்து விட்டு, மீண்டும் பாடங்கள் நடத்தி, மாலை, 4:00 மணிக்கு வகுப்பை முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
"Shaala Siddhi - 2018 " எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? ~பயனுள்ள குறிப்புகள்…
www.shaalasiddhi.nuepa.org என்ற முகவரியில் log in செய்து தங்கள் பள்ளிக்கான User name ஆக தங்கள் பள்ளிக்கான Udise code அடிக்க வேண்டும்.
Password ஆக
Pups@ (கடைசி நான்கு udise number )
Pums@ (கடைசி நான்கு udise number )
என்ற password ஐ யோ (அ)
தாங்களாக
உருவாக்கிய password ஐ யோ பயன்படுத்தி
உள்ளே சென்று
(2017-2018) தகவல்களை முதலில் நிரப்பவும்.
பின்னர் OFFLINE படிவத்தில் நிரப்பிய ( 2018 - 2019) தகவல்களை ஏற்றி தங்கள் பள்ளிக்கான BRTE யிடம் சரிபார்த்துவிட்டு FINAL SUBMISSION கொடுக்கவும் .
Shaala Siddhi எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள்.
வரும் 31 ஆம் தேதிக்குள் Shaala Siddhi பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.
அதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.
1.Students Profiles
இந்த பகுதில் நாம் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC, ST, OBC, General, Minority, Total.
இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .
2.Classwise Annual attendance rate
இந்த பகுதியில் 2017-2018 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .
இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .
3.Learning outcomes Annual report பகுதி
இங்கு 2017-2018 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .
4.Teachers Profiles
இதில் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.
5. Teachers Attendance
இந்த பகுதியில் 2017-2018 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் . CL தவிர பிற விடுப்புகள்.