சனி, 20 அக்டோபர், 2018

விதிகளைத் திருத்த சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்


BSNL தீபாவளி சிறப்பு தள்ளுபடிஅறிமுகம்


இந்திய கரன்சியை கண்காணிப்பு பட்டியலிருந்து நீக்க அமெரிக்கா முடிவு


பள்ளிக்கல்வி -மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் -தொடர்பாக -- DSE PROCEEDINGS




அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்க தமிழக அரசு முடிவு...


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .

சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .

தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு - அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு...

சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க, ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.

 மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவில் ஆய்வு:

இந்நிலையில் சத்துணவு மையங்களில்சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம்1,520 மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

அன்றைய தினம் சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.

அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட வழங்கப்படும். மேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய அப்டேட்டில் கலக்க வரும் வாட்ஸ் ஆப்.! சிறப்பு அம்சங்கள்.!


தற்போது புதிய அப்பேட்டில் களமிறங்க வாட்ஸ் தயாராகி விட்டது. 

இந்தியாவில் அதிகமானனோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதை மையமாக வைத்து தான் பொழுது போக்கு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் நடக்கின்றது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப் புதிய அப்பேட்டை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர்களும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். 

இதில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாமா .!

சமூக வலைத்தளங்களில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கு அதிகமானோரும், இந்திய அளவில் 250 மில்லியனுக்கு அதிகமானோரும் பயன்படுத்தி வருகின்றனர். .

இதனை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியாகி வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் புதிதாக மூன்று அப்டேட்கள் வாட்ஸ்-அப்பில் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* வாட்ஸ்-அப்பை, இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக Settings பகுதியில் மாற்றம் வரவுள்ளது. அதில் பயனாளர்களின் அனுமதி கேட்டு, பின்னர் இன்ஸ்டாகிராம் இணைப்பு நிகழும்.

* குறிப்பிட்ட Chatting Session பிடிக்கவில்லை எனில் Vacation Modeஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிறமொழி சொற்களுக்கான தூய தமிழ் சொற்கள் ...

வெள்ளி, 19 அக்டோபர், 2018

JACTTO-GEO நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - CPS ஆசிரியர் முழுவீச்சில் பங்கேற்க முடிவு





முப்பருவக்கல்வியில் மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை
    🥁🥁🥁🥁🥁🥁🎤
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் பொதுவாக 5 வருடங்களுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுகின்றன. அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவால் பாடத்திட்டம் முடிவு செய்யப்படுகிறது.



பல்வேறு துறை வல்லுநர்களும் பல்வேறு வகுப்பிற்கான பாடத்திட்டத்தினை வரைவு செய்கின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தந்தப் பாடங்களுக்குரிய நூல்களை எழுதுகின்றனர்.

இந்நிலையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, சட்டப்பேரவையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2012-2013ம் வருட கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2013-2014ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9 ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்டது. இந்த முறையின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் எழுதும் பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் 1,6,9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதியப் பாடப்புத்தகம் எழுதும் பணிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது,

'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில் , தற்பொழுது 9ம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10 வகுப்பில் உள்ளது போல் ஒரே புத்தகமாக வழங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் 8ம் வகுப்பு வரையில் தொடர் மதிப்பீட்டு முறையில் பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பருவத்திற்குரிய தேர்வு பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய பின்னர், 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்து தேர்வு எழுதுவதால் சிரமப்படுகின்றனர். எனவே 9ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை மாற்றலாம் என கூறியுள்ளனர்.

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து பொதுக்கல்வி வாரியத்தின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

மேலும், தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்து போது அறிமுகப்படுத்தப்பட்ட 9 ம் வகுப்பு முப்பருவமுறை திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.