வெள்ளி, 9 நவம்பர், 2018

இன்று உலக சட்ட உதவி நாள்~சட்ட உதவி மையத்தை மக்கள் பயன்படுத்த நீதிபதி ஆலோசனை...

ரேஷன் குறைதீர் முகாம்...

பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும்~தமிழக கருவூல அதிகாரி உத்தரவு…

சமக்ர சிகஷா ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழிகாட்டல் நெறிமுறைகள்







ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை கருவூலகத்திலே அளிக்கலாம் - தமிழக அரசு

ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.



அவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.


எனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) செயற்குழுக் கூட்டம் (17.11.2018 சனி) காலை 10 மணி



ஆசிரியர்கள் புகார் - 2 BEO - கள் , 'சஸ்பெண்ட்'


ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்று தராமல், காலதாமதம் செய்ததால், இரு வட்டார கல்வி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.




கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரு வட்டார கல்வி அலுவலகங்கள், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் செயல்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் மற்றும் அவர்கள் கடன் வேண்டி மனு அளித்திருந்தனர். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காதால், பணப்பலன்களை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர்.





இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அனைத்து ஆசிரியர்கள் சார்பில், கல்வி அலுவலரை கண்டித்து கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கடந்த மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தங்கவேல், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர், கபீர் ஆகியோர், ஆசிரியர்களிடம், 'சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பலன் உட்பட அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படும்' என, உறுதியளித்தனர்.





இந்நிலையில் ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி பெற்று தராமல் தாமதம் செய்ததாக, கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் சேகர், குமுதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல் கூறியதாவது:




கிருஷ்ணராயபுரம் தாலுகா வட்டார கல்வி அலுவலர் சேகர் மற்றும் குமுதா ஆகியோர், ஆசிரியர் களுக்கு பெற்று தர வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி செய்து தராமல், ஓராண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, இரு அலுவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஊட்டியில் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.15 கோடியில் நவீன உறைவிடப்பள்ளி

ஊட்டி அருகே, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியின மாணவர்களுக்காக, நவீன உண்டு உறைவிடப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது.




நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் குழந்தைகள் தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கோடப்பமந்து பகுதியில், 'ஏகலைவா பழங்குடியினர் மாதிரி பள்ளி' கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், ஊட்டி அடுத்துள்ள முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் வகையில், நவீன வசதிகளுடன் உண்டு உறைவிடப்பள்ளி கட்டட பணிகள் நடந்து வருகின்றன.




பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் சுப்ரமணியம் கூறுகையில், ''முத்தோரை பாலாடாவில் உள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கான உண்டு உறைவிட பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.


பழங்குடியின மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரமான கல்வி பெற முடியும்.

11ம்,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ,மிதிவண்டி: அமைச்சர் செங்கோட்டையன்

11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.




திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதிகளை அறிமுகப்படுத்தினார்.




இவருடன் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஸ்கில் ட்ரைனிங் என்ற நடைமுறை பயிற்சி விரைவில் பள்ளிகளில் அமல் படுத்தப்படும் எனவும் அதன் மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் வேலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.




மேலும் சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறினார்.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி உயர்வு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.


புதிதாக பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது.


இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.




தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் வெளியிட்டுள்ளார்.