சனி, 10 நவம்பர், 2018

மாணவர்களிடம் ஆய்வு ஈடுபாட்டை அதிகரிக்கும், 'இம்பார்ட்' திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

 மாணவர்களிடம் ஆய்வு ஈடுபாட்டை அதிகரிக்கும்,'இம்பார்ட்' திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாணவர்களிடம், ஆய்வு செய்யும் ஆர்வத்தை அதிகரிக்கும் 'இம்பார்ட்' திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



இத்திட்ட செயல்பாடு குறித்தும், மாணவர்களை வழிநடத்துவது குறித்தும் நேற்று ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட, 255 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மணி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பொள்ளாச்சி கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, எஸ்.எஸ்.ஏ., உதவி மாவட்ட அலுவலர் பெல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளுக்கு நிதிஒதுக்கீடு: பட்டியல் சேகரிப்பு பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள, சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகளுக்கு நிதிஒதுக்கீடு செய்ய, பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது.



திருப்பூர் மாவட்டத்தில், 359 சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் 250 பசுமைப்படை அமைப்புகள் உள்ளன. மன்றங்களின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் சார்பில், நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.கடந்த 2009ம் ஆண்டு இத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. அப்போது, திட்டத்துக்கு, ஒரு பள்ளிக்கு, 1,500 ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு ஐந்தாயிரம் ரூபாயாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

அதன்பின்னர், பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளாக, நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், துவக்கத்தில், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பள்ளிகளில் துவக்கப்பட்ட பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற அமைப்புகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடங்கின.தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கியுள்ளது. இடவசதி, சுற்றுச்சூழல் அமைப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட சுற்றுசூழல் மற்றும் பசுமைப்படை திட்ட அலுவலர்கள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.


சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில்,'' திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பாக செயல்படும், 250 பள்ளிகளை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. விரைவில் நிதிஒதுக்கீடு வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இம்முறை, பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி எப்போது?

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அடுத்தகட்டமாக அரசின் நடவடிக்கை இல்லாததால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.



அதுபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங் களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.


அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப் பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டு வரை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டதால், பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.


தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என, எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.


இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கை களை விரைவு படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,''என்றார்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண்(Part no, serial no) இவற்றை அறிய...

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண்(Part no, serial no) இவற்றை உங்கள் வா‌க்காள‌ர் அடையாள அ‌ட்டை எண்ணை உள்ளீடு செய்து கீழ் கண்ட link மூலம் அறிந்து கொள்ளவும்.


லஞ்சம் வாங்குபவர்கள் பற்றி புகார் கொடுக்க வேண்டுமா....?


படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!

நூற்றுக்கணக்கான நண்பர்கள் மாவட்ட வாரியாக லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தின் தொலைபே‌சி கேட்டு இருந்தீர்கள், அதற்க்கான வழிமுறைகளை பதிவு செய்துள்ளேன், லஞ்சம் இல்லா தமிழகத்தை கொண்டு வர துடிக்கும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி கலந்த பாராட்டுகள் பல.....!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.

லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து வருவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். இந்த நிலையில் லஞ்ச பேய் பிடித்த அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பது நமது தலையாய கடமையாகும். இதைச் செய்ய பலருக்கும் குழப்பம், தயக்கம். அந்த குழப்பத்தையும், தயக்கத்தையும் போக்கியே ஆக வேண்டும்.

யாராவது அதிகாரி லஞ்சம் கேட்கிறாரா உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புகார் கொடுத்தால் என்னவாகுமோ என்று அஞ்ச வேண்டாம்.

THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
No. 293, MKN ROAD,
ALANDUR, CHENNAI – 600 016. 
Telephone : +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142
Fax : 91-44-22321005

E-mail: dvac@nic.in

Thanks to marthandam chandrasekaran

ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் என்ன?


படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்! 

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 32வது விதியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கீழ்காணும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

(1) அனைவருக்கும் சம உரிமை (விதி 14):

இந்திய திருநாட்டில் உள்ள எந்த மாநிலத்திலும் எந்த பகுதியிலும் நமது நாட்டின் குடிமகன் சகல உரிமைகளுடன் வாழும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தனி மனிதரின் உரிமையை பறிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது. அதை நிராகரிக்கவும் முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர், அவரின் சமூக பாதுகாப்பை பெறும் உரிமையை பெற்றுள்ளான்.

(2) சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் ஆதாரத்தின் மீதான ஏற்றதாழ்வு தடை உரிமை (விதி 15):

நமது நாட்டில் வாழும் குடிமக்களிள் எந்த சாதி, மதம், மொழி, பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டு சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பார்க்கும் போது, குறிப்பிட்ட பகுதியில் தான் வசிக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்திற்கு செல்லக்கூடாது என்பது உள்பட எந்த கட்டுபாடுகளும் விதிக்க முடியாது. குறிப்பாக வர்த்தக நிலையங்கள், ஓட்டல்கள், பொது பொழுதுபோக்கு அரங்கங்களுக்கு செல்வது அல்லது பொது மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு, ஏரி, குளம், குளியல் அறை, சாலை, மக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்பட பொது இடங்களுக்கு செல்வதற்கு யாரும் நிர்பந்தம் செய்யவோ, தடை விதிக்கவோ முடியாது. மேலும் பழைய பஞ்சாங்கங்களை கூறி பெண்கள், சிறுவர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த மாற்றத்தை தடுக்க அரசாங்கம் சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.

(3) பொது சேவையில் சம வாய்ப்பு உரிமை (விதி 16):

மாநில அரசின் கீழ் இயங்கி வரும் எந்த துறையிலும் ஊழியர்கள் நியமனம் செய்யும் விஷயத்தில் நமது நாட்டில் வாழும் அனைத்து குடிமகன்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியை பெற எந்த சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றை காரணம் காட்டி ஒதுக்க முடியாது. அரசு பணியில் சேர தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக இட ஒதுக்கீடு உரிமையை அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. இது போன்ற சட்டம் கொண்டு வரும் அதிகாரம் மக்கள் மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

(4) மத வழிப்பாட்டு உரிமை (விதி 17):

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் தனிமனித உரிமையை காப்பாற்றி கொள்ளும் அதிகாரம் படைத்துள்ளனர். குறிப்பிட்ட மத வழிபாட்டை பின்பற்றும் மக்கள் தான் வாழ வேண்டும் என்ற விதிமுறை எதுவும் கிடையாது. நாட்டு குடிமக்கள் தாங்கள் விரும்பும் மத வழிபாடுகளை சுதந்திரமாக செயல்படுத்த உரிமை உள்ளது. எந்தவித அடிப்படை காரணங்களை காட்டிலும் அதை தடுக்க முடியாது. அப்படி தடுத்தால் தண்டனைக்குரிய குற்றமாகும். 

(5) விருது வழங்குவதை தடை செய்யும் உரிமை (விதி 18):

நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகள் பல துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தில் இந்திய ராணுவம் மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். இது தவிர வேறு எந்த விருதும் வழங்கக்கூடாது. இந்திய குடிமகனாக இருப்பவர் வெளிநாட்டில் விருது பெறக்கூடாது. இந்திய குடிமகனாக இல்லாத வெளிநாட்டை சேர்ந்த நபர், இந்தியாவில் லாபம் தரும் பெரிய பதவியிலோ அல்லது கவுரவமான பொறுப்பில் நியமனம் செய்ய வேண்டுமானால், இந்திய குடியரசு தலைவரின் முழு அனுமதி பெற வேண்டும்.

(6) பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமை:

நமது அரசியலமைப்பு சட்டம் 19வது பிரிவின் கீழ்கண்ட சுதந்திர உரிமைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அ. பேச்சு சுதந்திர உரிமை (இது பத்திரிக்கை சுதந்திரம் உள்பட). 

ஆ. அமைதியாக மற்றும் சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை.

இ. சங்கம், அமைப்புகள் தொடங்கும் உரிமை.

ஈ. இந்திய தேசம் முழுவதும் சுற்று பயணம் செய்யும் உரிமை.

உ. இந்தியாவின் எந்த பகுதியிலும் சுதந்திரமாக வாழும் உரிமை.

ஊ. நாட்டில் எந்த பகுதியிலும் சுதந்திரமாக தொழில், வர்த்தகம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தகைய உரிமையை யாரும் தடுக்க முடியாது: இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கவும், சுதந்திர நாட்டின் மேன்மையை போற்றவும், நீதி, நேர்மை, மக்களாட்சி தத்துவத்தை நிலை நாட்டவும், பொது வாழ்வில் தூய்மை, நம்பகதன்மையை காக்கவும் இத்தகையை உரிமையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கான உரிமைகளை பெற்று தர மக்கள் மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கம் வகுத்து செயல்படுத்தும் சட்டங்களை செயல்படுத்துவதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் உரிமை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 நவம்பர், 2018

Bio - Metric Attendance : அமல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


SSA - துவக்கப்பள்ளிகள் உபரியாக உள்ள இடங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களை கண்டறிய CEO- களுக்கு உத்தரவு!



பள்ளிகளில் தேசிய கொடி மற்றும் தேசிய சின்னத்தை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


மாணவர்களிடம் நேர்மையை வளர்க்க நேர்மை அங்காடி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி
ஒன்றியத்தில் உள்ள ஆவணத்தாங்கோட்டை-மேற்கு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நேர்மை அங்காடி இயங்கி வருகின்றது.



இந்த அங்காடியில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு ,விலைப்பட்டியலில் உள்ளபடி மாணவர்கள் அப்பொருளுக்கான தொகையை அருகில் உள்ள பணப்பெட்டியில் போட்டு விட்டு தாமாகவே சில்லறையும் எடுத்துச்செல்கின்றனர். இதன் மூலம் மாணவர்களிடம் நேர்மை பண்பும்,ஒழுக்கமும் வருகின்றது.இந்த அங்காடியில் மாணவர்களே உரிமையாளராகவும், நுகர்வோராகவும் இருக்கின்றனர்.