ஞாயிறு, 11 நவம்பர், 2018

அறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்பட உள்ளது...


தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், நடப்பாண்டு முதல், பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், பரிசுத் தொகையுடன், 'சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது' வழங்கப்பட உள்ளது.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில், சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும், 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என, ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.அதை செயல்படுத்த, பரிசுத் தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய்; இதர செலவினங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை நவ., 30க்குள் அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இவ்விருது வழங்கப்பட உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் தொய்வின்றி நடைபெற அறிவுறுத்துதல் சார்ந்து...

வாட்ஸ்ஆப்-ல் நீங்கள் பேசினால் எழுத்துக்களாக மாற்றும் முறை...

உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் ரோபோக்கள்~ சீனவில் அறிமுகம்…

உலகத்திலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
" இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும் " என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனி, 10 நவம்பர், 2018

வீட்டு மனை வரன்முறை அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு



சென்னை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணப் பதிவு குறித்த விவரங்களை நவம்பர் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2016 -ஆம் ஆண்டு அக்டோபர் 20 -க்கு முன்பாக வீட்டுமனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளைப் பொருத்து உள்ளாட்சி அமைப்பினரால் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள், தடையின்மைச் சான்று வழங்கப்பட்ட மனைகளைப் பொறுத்தும் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்த சார் பதிவகத்தின் பெயர், வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களைத் தெரிவிக்க கடந்த 3 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்திருந்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பலர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வரும் 16 ஆம் தேதி ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என காலக்கெடு நீட்டித்துள்ளது தமிழக அரசு. மேலும் http://www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 15-ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறை அமல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு




சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 15-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி மூலம் அமல்படுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Commerce Wizard - 2018 | மாணவ, மாணவியர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவித்தல் - சார்பு

பள்ளிக் கல்வி -ICIAI அமைப்பு
- Commerce Wizard - 2018 தேர்வில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அதிக அளவில் பங்குகொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் இதற்கான அறிவிப்பினை வெளியிடுதல் மேலும் www.icw.icai.org என்ற இணையதளமுகவரியில் கூடுதல் விவரங்களை மாணவ, மாணவியர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவித்தல் - சார்பு



உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் தற்போது பயோமெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்


உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் தற்போது பயோமெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்
`படிப்படியாக 6, 7  மற்றும் 8ம்வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறைஅமல்படுத்தப்படும்’  என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஈரோட்டில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக  சென்னை, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  300 பள்ளிகளில்  இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்த திட்டம்  அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வணிகவியல் மாணவர்களை சிறந்த பட்டய  கணக்காளர்களாக உருவாக்க 300  பட்டய கணக்காளர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலமாக  25 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

பயோமெட்ரிக் முறை தற்போது 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  உள்ள ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக 6, 7  மற்றும் 8ம்வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை  அமல்படுத்தப்படும்.  இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

ஆனந்த விகடன் குழுமத்தின் சார்பாக நடைபெறும் போட்டிகளில் மாணவர்களை பங்கு பெற செய்தல் வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


தூய்மை பாரதம் - இறைவணக்க கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் -சார்பு