செவ்வாய், 13 நவம்பர், 2018

நாமக்கல்லில், 15-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்



நாமக்கல்லில் வருகிற 15-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இதையொட்டி கால், கை ஊனமுற்றோர், குள்ளமானோர்களுக்கு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடக்கிறது.
இதேபோல் முற்றிலும் பார்வையற்றோர் மற்றும் மிக குறைந்த பார்வையற்றோருக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடக்கிறது.

இதுதவிர கை, கால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, மேஜைப்பந்து போட்டிகளும், பார்வையற்றோருக்கு கைப்பந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

திங்கள், 12 நவம்பர், 2018

FLASH NEWS:-2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது விபரம்


கூட்டுறவு -65 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக கொண்டாடுதல் - கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் 13-11-2018 அன்று நடைபெறுதல் - மாணவ, மாணவியர்களை கலந்து கொள்ள கோருதல் -தொடர்பாக...

பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஆசிரியர்களுக்கு பயிற்சி -ceo


மூளைக்கு 10 நிமிட உடற்பயிற்சி


மூளைக்கு 10 நிமிடம்
பெரும்பாலானவர்கள் இப்போது நினைவாற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதர் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். அலுவலக பணிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அதனால் தேவையற்ற மனஅழுத்தத்தி்ற்கும் உள்ளாகுவார்கள். நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால், மூளை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.

பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும். ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
‘‘மூளையின் செயல்பாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்போதுதான் அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சினைகள் உருவாகிறது.மூளையில் ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம். அதற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட போதுமானது. அது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உயர்த்தும்’’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.


மூளைக்கு முக்கியமானவை
மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
சரியான நேரத்தில் அவைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.
காலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.
காலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகிறது.
மதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.
மாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்நெட்டுகள் சாப்பிட வேண்டும். 


பன்றிக்காய்ச்சல் தொற்றை தடுக்க பொது இடங்களை சுத்தம் செய்ய காலக்கெடு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்

பன்றிக்காய்ச்சல் தொற்றை தடுக்க பொது இடங்களை சுத்தம் செய்ய காலக்கெடு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்

பன்றிக்காய்ச்சல் தொற்றை தடுக்க பஸ் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் உள்பட பொதுமக்கள் அதிக அளவில் திரளும் பொது இடங்களை ஒரு வார காலத்துக்குள் சுத்தம் செய்ய வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-


உலக சுகாதார நிறுவனம் அளித்து உள்ள வழிகாட்டுதல்படி கை கழுவும் முறைகளை கடைபிடிக்க வேண்டும். பன்றி காய்ச்சல் நோய் தொற்று 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் 5 சதவீதம் லைசால் திரவம் பயன்படுத்தி சுத்தம் செய்தால் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

எனவே மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பஸ்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், திரையரங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்குள் 5 சதவீதம் கிருமி நாசினி திரவம் பயன்படுத்தி தரை தளங்களை சுத்தம் செய்ய வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் பிளச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தூள் ஆகியவற்றை முறையே 1:4 என்ற விகிதத்தில் கலந்து சுற்றுப்புறங்களில் தெளிக்க வேண்டும். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரிகள் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்:  பணியாளர் நலத்துறை அறிவுறுத்தல்




லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சோதனைகளின்போது குழப்பங்களைத் தடுக்க, அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


இந்திய பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றதும், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்தார். அதில் ஒன்று சரியான நேரத்துக்கு பணியில் இருப்பதாகும். இதற்காக, விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் நிறு வப்பட்டன. முதலில் எதிர்ப்பு வந்தா லும், அதன்பின் மத்திய அரசு ஊழி யர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.


தமிழகத்தைப் பொறுத்தவரை, இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தற்போது பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலகங்களில் படிப்படியாக விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தலைமைச் செயல கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப் பதால் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையில், தற்போது பள்ளி களில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை கண்காணிக்க விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அரசு பணியாளர் கள் அனைவரும் பணியில் இருக் கும்போது கட்டாயம் புகைப்பட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறைச் செயலர் அறிவுறுத்தினார். அனைத்து துறை களின் தலைவர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி னார். 

அதில், அடையாள அட்டை யில் அரசுப் பணியாளர் பெயர் மற்றும் பதவி, தமிழ், ஆங்கி லத்தில் இடம் பெறுவதுடன், புகைப் படம் கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் இதை பின்பற்றி அடையாள அட்டை கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட் டாலும், பெரும்பாலான அலுவலர் கள் அணியாமல் இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில், தீபாவளியை முன்னிட்டு போக்கு வரத்துத் துறை, தொழிலாளர் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தது. அப்போது பல அலுவலகங்களில் அதிகாரிகள், அலுவலர்கள் அல்லாதவர்கள், புரோக்கர்கள் என பலரும் அந்த அலுவலகங்களில் இருந்துள்ளனர்.
அரசு அலுவலர்கள் உரிய அடையாள அட்டை அணியாததால் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரிகள், அல்லாதோர் என பிரித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சோதனையின்போது பலர் அடையாள அட்டை அணியாமல் இருந்தது குறித்து தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றுவோர், பணியில் இருக்கும்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது



டிஜிட்டல் பேமன்ட் பிரச்சனை தீர்க்க~ஓம்பட்ஸ்மேன்…

வனத்துறை பணியாளர் தேர்வுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி...

தமிழகத்தில் 471 அரசுப்பள்ளிகளில் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம்- அமைச்சர் செங்கோட்டையன்




வேலூர்: தமிழகம் முழுவதும் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 



வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் 2017-18ம் ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு சாரா பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா நேற்று விஐடி 
பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், கலெக்டர் ராமன், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ ரவி வரவேற்றார். வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், ‘இந்தாண்டு 59 பள்ளித்தலைமை ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி காட்டியுள்ளனர். இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகளை நெறிமுறைபடுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்’ என்றார். 

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு சாரா பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு கேடயம், ரொக்கப்பரிசுகளை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது. நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 500 சிறப்பு ஆசிரியர்களை கொண்டு சி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசுப்பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் சுத்திகரிப்பு உபகரணங்கள் கொண்ட 1000 புதிய வாகனங்கள் வாங்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினிகள் மூலம் பாடம் நடத்தப்படும். புதிய பாடதிட்டங்களை செல்போன் செயலி மூலமாக பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி அனைத்து பாடங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.