திங்கள், 12 நவம்பர், 2018

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்:  பணியாளர் நலத்துறை அறிவுறுத்தல்




லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சோதனைகளின்போது குழப்பங்களைத் தடுக்க, அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


இந்திய பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றதும், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்தார். அதில் ஒன்று சரியான நேரத்துக்கு பணியில் இருப்பதாகும். இதற்காக, விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் நிறு வப்பட்டன. முதலில் எதிர்ப்பு வந்தா லும், அதன்பின் மத்திய அரசு ஊழி யர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.


தமிழகத்தைப் பொறுத்தவரை, இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தற்போது பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலகங்களில் படிப்படியாக விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தலைமைச் செயல கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப் பதால் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையில், தற்போது பள்ளி களில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை கண்காணிக்க விரல் ரேகை பதிவு இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அரசு பணியாளர் கள் அனைவரும் பணியில் இருக் கும்போது கட்டாயம் புகைப்பட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறைச் செயலர் அறிவுறுத்தினார். அனைத்து துறை களின் தலைவர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி னார். 

அதில், அடையாள அட்டை யில் அரசுப் பணியாளர் பெயர் மற்றும் பதவி, தமிழ், ஆங்கி லத்தில் இடம் பெறுவதுடன், புகைப் படம் கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் இதை பின்பற்றி அடையாள அட்டை கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட் டாலும், பெரும்பாலான அலுவலர் கள் அணியாமல் இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில், தீபாவளியை முன்னிட்டு போக்கு வரத்துத் துறை, தொழிலாளர் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தது. அப்போது பல அலுவலகங்களில் அதிகாரிகள், அலுவலர்கள் அல்லாதவர்கள், புரோக்கர்கள் என பலரும் அந்த அலுவலகங்களில் இருந்துள்ளனர்.
அரசு அலுவலர்கள் உரிய அடையாள அட்டை அணியாததால் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரிகள், அல்லாதோர் என பிரித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சோதனையின்போது பலர் அடையாள அட்டை அணியாமல் இருந்தது குறித்து தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றுவோர், பணியில் இருக்கும்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது