வியாழன், 29 நவம்பர், 2018

SMC - பள்ளி மேலாண்மை முன்னேற்றக்குழு - பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்துதல் BRC க்கு நிதி ஒதுக்குதல் சார்ந்து CEO செயல்முறைகள்



குரூப்4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 3ம் தேதி தொடக்கம்~ டிஎன்பிஎஸ்சி தகவல்...

யூ.பி.எஸ் மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தும் போது மெயின் பாக்சை ஆப் செய்ய வேண்டும்...

🌷🌷🌷CCRT - 10 Days TRAINING FOR Govt / Aided School TEACHER'S



உங்கள் குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யுங்கள்...

கஜா புயல் பாதிப்பால் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்? தமிழக அரசு கோரிக்கை… மத்திய அரசு பரிசீலனை…

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் திசம்பர் மாத உத்தேச பயணத்திட்டம்


மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டிக்காததால் பள்ளியிலும் பயன்படுத்துகிறார்கள் - ஆசிரியர்கள் கவலை

பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் மதுபானம் அறுந்துவதும், பள்ளியில் வன்முறையில் இறங்குவதும், டூவீலரில் சாகசம் புரிவதும், செல்போனில் மூழ்கி கிடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதை பெற்றோர் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சிறுவர்களின் போக்கு திசை மாறும் விதமாக உள்ளது. டூவீலரில் அதிவேகமாக செல்வது விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஒட்டுவது என தொடர்கிறது. இதனால் எதிரே வரும் வாகனத்தில் மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. பெற்றோர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கின்றனர். போலீசார் பல்வேறு காரணங்களால் கெடுபிடி குறைத்தாலும் அதிகமாக சிறுவர்கள் வாகனங்களை ஒட்டி வருகின்றனர்.


மேலும் மாலை நேரங்களில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் கூட மதுபோதையில் திரிவதை காணமுடிகிறது. மறைவான இடங்களில் புகைப்பது, செல்போனில் ஆபாச படம் பார்ப்பது உள்ளிட்ட செயல்களும் நடக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் சொல்வதை கேட்பது இல்லை எனவும், அவர்களுடன் தகராறு செய்வதாகவும் தெரிகிறது. இப்படி சிறுவர்கள் கெட்டு சீரழிவதால் வரும் கால சந்ததியினர் அழிவை நோக்கி செல்வதாகவும் இதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் எனவும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமுக ஆர்வலர் ஜிப்ரி கூறியது, இளைய சமுதாயம் கெடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது செல்போன். இதை தாராளமாக பயன்படுத்த பெற்றோர் அனுமதிப்பதால் இன்று யாரையும் மதிப்பது கிடையாது. ஆசிரியர்கள்முதல் அனைவரிடமும் ஒருவிதமனப்போக்குடன் செயல்படுகின்றனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் பெற்றோர், ஆசிரியர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் பிள்ளைகள் நல்ல வழியில் செல்வார்கள். மேலும் மாலை நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார்.

பள்ளிகளில், மாணவியர், தலையில் பூ சூடவும், கொலுசு அணியவும், தடையா?

பள்ளிகளில், மாணவியர், தலையில் பூ சூடவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளதுஎன்று செய்தி .

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,அனைத்து மாணவர்களும், மாணவியரும், பள்ளி நாட்களில் சீருடை மட்டுமே, அணிந்து செல்ல வேண்டும். சில பள்ளிகளில், காலணிகளும், பல பள்ளிகளில், 'ஷூ'அணிந்தும் செல்லவேண்டும் என்பது விதி.
அதேபோல்,நர்சரி பள்ளி குழந்தைகள்,தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிந்து செல்லவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில அரசு பள்ளிகளில், மாணவியர் தலையில் பூ வைத்தும், கொலுசு அணிந்தும் வருகின்றனர். சில மாணவர்கள், கைகளில், பல வண்ண பட்டை மற்றும் கயிறு அணிந்து வரு கின்றனர்.இதனால், மாணவ - மாணவியர் இடையே பிரச்னை ஏற்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியர் பூ சூடி வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த பட்டு உள்ளனர்.அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ், டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள் அணியவும்,

தேவையற்ற அணிகலன்கள் அணிவதற் கும், மருதாணி வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில், ஏற்கனவே இந்த கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மாரடைப்பு நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும (app) செயலி கண்டுபிடிப்பு -மக்கள் வரவேற்பு

ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவரும், ஈ.சி.ஜி எனும் இயந்திரமும் தேவை. ஆனால், மாரடைப்பு ஏற்படும்போது இந்த இரு வசதியும் அருகில் இருப்பது கடினம்.

ஆனால், இப்போது தான் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறதே? அதை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்று கண்டறிய ஒரு செயலியை உருவாக்கியுள்ளது இன்டெர்மவுன்டெய்ன் ஹெல்த்கேர் என்ற நிறுவனம்.

கடந்த வாரம் அமெரிக்க இதய நலச் சங்கம் நடத்திய மாநாட்டில், இந்த செயலியின் துல்லியம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் செயலியுடன் விரல்களை வைத்து நாடி பார்க்கும் ஒரு சிறிய வில்லை போன்ற கருவியையும் பயன்படுத்த வேண்டும். தனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து கொண்டால், அது நாடித் துடிப்பை மொபைலுக்கு அனுப்பும். அதை செயலி, இ.சி.ஜி., இயந்திரம் போலவே வரைபடமாக மாற்றி, இணையத்தின் மூலம் இதய மருத்துவருக்கு அனுப்பும்.  உடனடியாக நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாம். இல்லாவிடில் நிம்மதியாக இருக்கலாம்.

இதய வலி உள்ள, 200 பேருக்கும் மேற்பட்ட வர்களுக்கு இந்த செயலியைப் பயன்படுத்தி துல்லியமாக தாக்குதல் இருப்பதை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் இதய மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.