வியாழன், 24 ஜனவரி, 2019
ஜாட்டோ ஜியோ வின் இன்றைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...
இன்று(24-01-2019) வியாழன் வட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ நடத்த இருந்த மறியல் போராட்டம் மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
~மாநிலஒருங்கிணைப்பாளர்கள்,
ஜாக்டோ-ஜியோ.
அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்~ வை.கோ…
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தி நடத்தி வருவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மழலையர் பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்...
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் ஆபத்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது.
ஆனால், மழலையர் வகுப்புகளை அதுபோன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இதுதான் மாண்டிசோரி முறையிலான கல்வியாகும். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.
எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
புதன், 23 ஜனவரி, 2019
அன்பானவர்களே! வணக்கம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு என் வேண்டுகோள்...
*தொடக்கக்கல்வித்
துறையில் வேலைநிறுத்தத்தை வலுப்படுத்துங்கள்.
*பள்ளிக்கல்வித்துறையில் தீவிரப்படுத்துங்கள்.
* அரசுத்துறையின் பல்வேறு அலுவலகங்களில் கவனம் செலுத்துங்கள்.
*தேவையின் அடிப்படையில், காலத்தின் கட்டளையை ஏற்றுக்கொண்டு் கூட்டுப்பரப்புரைக்கும்,குழுச்செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை தந்து கடைமையாற்றுங்கள்.
*வெற்றிமுகம் நோக்கி பயணம் தொடருங்கள்.
*போராட்டக்களத்தில் வெஞ்சினத்தோடு சமர்புரியும் மன்றத்தின் மறவர்,மறத்தியர் அனைவரையும் மாவட்ட அமைப்பு பாராட்டுகிறது;
வாழ்த்துகிறது.
~முருகசெல்வராசன்.
💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)