வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஜாக்டோ~ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது…

எங்கள் பணம் ரூ.50 ஆயிரம் கோடி எங்கே? தமிழகம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர் எழுச்சி மறியல் - கைது...

நன்றி : தீக்கதிர் நாளிதழ்

சென்னை, ஜன.23-ஆசிரியர்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் வட்ட, ஊராட்சி, மாவட்ட தலைநகரங்களில் புதனன்று (ஜன. 23)சாலை மறியல் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக சென்னைமாநகராட்சி அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் தலைமை யில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப் பாளர்கள் மு.அன்பரசு, அ.மாயவன், எஸ்.சங்கர்பெருமாள், ந.ரங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.டேனியல் ஜெயசிங், வெங்கடேசன், சத்தியநாதன், ஜெ.பட்டாபி, அந்தோணி,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சுந்தரம்மாள், அருணா (ஆசிரியர் சங்கம்), டெய்சி (ஐசிடிஎஸ்), சீனிவாசலு, சிவா (செங்கொடி சங்கம்) மற்றும் ஏராளமானஅனைத்துத் துறையைச் சேர்ந்த அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சிஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோரை காவல் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் ந.ரங்கராஜன், மு.அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். வாழ்வாதாரப் பிரச்சனையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறைதொடர வேண்டும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கை வெறும் காகித அறிக்கை யாக இருந்து கொண்டிருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு 6ஆவது, 7ஆவது ஊதியக் குழுவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.15,000 அடிப்படை ஊதியத்தில் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சித்திக் குழு வினுடைய அறிக்கையில் இந்த இழப்பீட்டை சரி செய்வதற்குரிய சாராம்சம் இல்லாமல் நீதிமன்றத்திலே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை களிலுள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக் கூடிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படும் நிலையில், தற்போது இயற்றியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்56, 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும்.3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதால் தொடக்கக் கல்வி நிர்வாகமே இல்லாதநிலையை ஏற்படுத்தும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. எனவே பள்ளிகளை இணைக் கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

நிதிப் பற்றாக்குறை உண்மையா?

நிதிப்பற்றாக் குறை என அரசு கூறுகிறது. இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரம் பேர் செலுத்தியுள்ள தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய். அதைத்தான் கேட்கிறோம். அரசினுடைய பங்களிப்பு25 ஆயிரம் கோடி ரூபாய். அந்த பணம்எங்கே போனது? நிதித்துறை செய லாளர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோரிடம் கேட்டால் இருக் கிறது என்று மட்டும் கூறுகிறார்கள். எங்கே இருக்கிறது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. 21 மாத நிலுவை 50 ஆயிரம் கோடி ரூபாய். 50 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே இருக்கிறது எனக் கூறத் தயாரா?2 விழுக்காடு ஊதியம் உயர்ந்தால் அரசுக்கு கூடுதல் செலவினம் எனக் கூறும் அரசு, எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்திய போது அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு என அறிவித்தீர்களா? எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கிய போது அதனால் அரசுக்கு இவ்வளவு கூடுதல் செலவு என தகவல் வெளியிட்டீர்களா? எனவே மேற்கண்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழை த்துப் பேசி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இடைநிலை ஆசிரியர்கள் 98 சதவிகிதம் இதற்கு ஒப்புக் கொண்டுள்ள தாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒருஇடைநிலை ஆசிரியர் கூட அந்த அரசாணையை பெற்று அங்கன்வாடி மையத்திற்கு செல்லவில்லை என்றனர். தேர்வு நேரத்தில் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுமே என்ற கேள்விக்கு, மாணவர்களின் நலன் கருதி விடுமுறைநாட்களில் கூட பாடம் நடத்தி முடிக்கப் பட்டிருக்கிறது. தேர்வு நேரத்தில் எங்களால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சனி ஞாயிறுலும் வகுப்பு எடுக்க தயார் என்கின்றனர் ஆசிரியர்கள் .

அன்பானவர்களே!வணக்கம். 25.01.19 ஜாக்டோ-ஜியோ தமிழ்நாட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்துகிறது...

25.01.19
தமிழகமெங்கும் மாவட்டத்தலைநகரில் மகத்தான மறியல் போராட்டத்தை நடத்துகிறது.

ஜாக்டோ-ஜியோ சொல்லி, 
ஜாக்டோ-ஜியோ அழைத்து,
கோரிக்கைகளை மனதில் கொண்டு  வேலைநிறுத்தத்திலும்,
மறியலிலும் பங்கேற்று இப்போரட்டத்தை வெற்றி முகம் நோக்கி முன்னேற்றப்பாதையில் வழி நடத்திவரும்
நாம் ,அந்த
 ஜாக்டோ-ஜியோ சொல்லும் வரை, 
அந்த கோரிக்கைகளுக்கு முடிவுகள் தெரியும் வரை
நான் பணிக்கு திரும்பமாட்டேன் என்று திடமான முடிவெடுத்து வேலைநிறுத்தத்தில் நில்லுங்கள்.
வேலைநிறுத்தத்தை ,மாவட்டமறியலை 
வெற்றிகரமாக்குங்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த 
மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாள்ர்கள் ,மன்ற  முன்னோடிகள்,
மன்றத்தின் ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! நாமக்கல் நோக்கி மறியல் படை நடத்துங்கள்!
நாமக்கல் பூங்காச்சாலையை நிறைத்திடுங்கள்!
ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காக ஆசிரியர் மன்றத்தின் அனைத்து உறுப்பினரும் கைதாகி சிறை ஏகினர் என்று பாராட்டத்தக்க முடிவெடுத்து செயலாற்றுங்கள்.

#நாம்வெல்வோம்.
-முருகசெல்வராசன்

வியாழன், 24 ஜனவரி, 2019

தொடர் வேலை நிறுத்தம்... தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் மன்ற நிர்வாகிகளுக்கு,கடந்த கால போராட்ட நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு,போராட்ட நுணுக்கங்களை வழங்கிய போது...

24.1.2019 -ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்ட நிகழ்வுகள்

ஜாட்டோ ஜியோ வின் இன்றைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...

இன்று(24-01-2019) வியாழன் வட்ட அளவில்  ஜாக்டோ-ஜியோ  நடத்த இருந்த மறியல் போராட்டம்  மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

~மாநிலஒருங்கிணைப்பாளர்கள்,
ஜாக்டோ-ஜியோ.

அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்~ வை.கோ…

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தி நடத்தி வருவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மழலையர் பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்...

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் ஆபத்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது.

ஆனால், மழலையர் வகுப்புகளை அதுபோன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இதுதான் மாண்டிசோரி முறையிலான கல்வியாகும். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.
எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் மறியல் போரட்டம்~நாளிதழ் செய்திகளில்...

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தலைநகர் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மாண்புமிகு. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று கோரிக்கைகளுக்கும்,போராட்டத்திற்கும் ஆதரவு நல்கி உள்ளார்கள்...