சனி, 16 பிப்ரவரி, 2019

பள்ளி கல்வி துறையில் இயக்குனர்கள் இட மாற்றம்...

தமிழக பள்ளி கல்வி துறையில் இரண்டு இயக்குனர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இடம் மாற்றப்பட்டுள்ளார். 

அங்கு உறுப்பினராக பணியாற்றும் உஷா ராணி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IFRMS எளிமையான முறையில் மாதந்தோரும் வரி கட்டுவது கட்டாயமாக்கப்படுகிறது...

வருவாய் ஆண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கான  Income tax தொகை மார்ச் மாதத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். IFRMS  இதற்கான வழிவகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களுக்கான
வருகின்ற மார்ச் மாதத்திலேயே தங்களுடைய சேமிப்பு மற்றும் வீட்டு வாடகை மற்றும் வீட்டுகடன் மற்றும் இதர செலவினங்களை தாங்கள் முன்பாகவே கணித்து தருதல் அவசியமாகிறது.
அப்படி கணித்து தரக்கூடிய தொகை வருட கடைசியில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றம் செய்யும் வசதி வழங்கியும் உள்ளது.

எனவே அரசு மூலமாக மாத சம்பளம் பெறுபவர்கள்மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி கட்டாய பிடித்தம் செய்ய வேண்டும். 

நாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு ~ இறுதிவரை போராடி சாதித்த இடைநிலை ஆசிரியர்கள்…

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பிப்ரவரி 23 மற்றும் 24 ~ வாக்காளர் சிறப்பு முகாம்…


வாக்காளர் சிறப்பு முகாம் 
பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில்  வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெறுகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி- 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு /பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் - விவரங்கள் கோருதல் - சார்பு...

ஜாக்டோ -ஜியோ ~ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்(14-02-2019) …

வியாழன், 14 பிப்ரவரி, 2019

FY:2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

📘நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம். 

📘housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

📘LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

📘மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

📘கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 📘நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

 
📘வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

📘வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

📘Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/-  ஐ 87A ல் கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம்~ வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு…